#Nirbhaya - வினய் ஷர்மாவின் கருணைமனுவில் புதிய திருப்பம்...
2012-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டெல்லி துயரச் சம்பவமான நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டெல்லி துயரச் சம்பவமான நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி வினய் ஷர்மா, தான் தனது கருணை மனுவில் கையெழுத்து இடவில்லை எனவும், தனது கருணை மனுவை தான் திரும்ப பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற வினய் சர்மா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இந்த கடிதத்தினை மத்திய அமைச்சகம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்ததாகவும், முன்பு டெல்லி அரசு வினய் சர்மாவின் கருணை மனுவை கடுமையாக நிராகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.
ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனு தொடர்பாக, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. அதே நேரத்தில், டெல்லி துணைநிலை ஆளுநரின் கீழ் உள்துறை அமைச்சகம் சார்பில் நிர்பயா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வினய் ஷர்மாவின் கருணை மனு ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வினாயின் மனுவை தள்ளுபடி செய்ய உள்துறை அமைச்சகம் பகிரங்கமாக பரிந்துரைத்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வினய் சர்மா தனது கருணை மனுவினை திரும்ப பெற விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 வயதான நிர்பயா 2012 டிசம்பர் 16-17 தேதிகளில் இரவு நகரும் பேருந்தில் ஆறு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்பு நகரும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். சாலையில் வீசப்படுவதற்கு முன்பு அவர் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பின்னர் நிர்பயா டிசம்பர் 29, 2012 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார், பின்பு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார், மற்றொருவர், சீர்திருத்த இல்லத்தில் வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மற்ற நான்கு குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது, பின்னர் இது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனது மரண தண்டனையினை குறைக்க கருணை மனு எழுதியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 72 (பிரிவு 72)-ல், குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு குற்றவாளியின் தண்டனையையும் குறைப்பதற்கும், அவரது தண்டனையை முற்றிலுமாக தள்ளுபடி செய்வதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.