பிரதமர் நரேந்திர மோடி தனது ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பின், முதல் பணியாக ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமரிடம் விரிவான அறிக்கை அளிக்கப்படும்' என்றார்.


இதனிடையே காஷ்மீர் நிலவரம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது அதனைத் தொடர்ந்து, கென்யாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் சுற்றுப்பயணம் சென்றிருந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு திங்கள்கிழமை தாயகம் திரும்பினார்.


பாகிஸ்தான் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து கலகம் ஏற்பட மறைமுக செயலில் ஈடுபட்டுள்ளது. மேலும் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. 


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி வானி சுட்டு கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவனது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் கூடுதல் துணை ராணுவ படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.,வும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.