இந்துத்துவா மதவெறி கும்பலிடம் இருந்து முஸ்லிம் இளைஞரை காப்பாற்றிய காவலர்
சமூக வலைதளத்தில் ஹீரோவான சீக்கிய மதத்தைச் சேர்ந்த காவல்துறை.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் உள்ள கோயிலுக்கு தான் காதலி அழைத்ததால், அவரை பார்க்க இஸ்லாமிய இளைஞர் வந்துள்ளார். காதலி கோயிலுக்கு உள்ளே இருந்ததால், அவளுக்காக கோயிலின் வளாகத்தில் காத்திருந்தார். பின்னர் தனது காதலி வந்ததும் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
இதைப் பார்த்த இந்துத்துவா மதவெறிக்கும்பல், அவர்களிடம் விசாரித்த போது, அந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்ததும், அவனை மதவெறிக்கும்பல் தாக்கத் துவங்கியுள்ளது. கோயில் பாதுகாப்புப்பணியில் இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ககன்தீப் சிங், மதவெறி கும்பலிடமிருந்து இஸ்லாமிய இளைஞரை பத்திரமாக காப்பாத்தி உள்ளார்.
இச்சம்பவத்தை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்த அனைவரும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.