நபர் ஒருவர் ஒரு பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ பதிவெடுத்த அக்கம் பக்கத்தினர் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர். அவ்வாறு இணையத்தில் தீயாய் பரவிய இந்த வன்கொடுமை வீடியோவை சமூக வளைதங்களில் பொது மக்கள் கண்டனங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து போலீஸார் வீடியோவை வைத்து விசாரணை நடத்தியதில்,  அந்த நபர் பெயர் ஷியாம்பிஹாரி என்றும், அடி வாங்கிய பெண் பெயர் குசுமா தேவி என்றும் அடையாளம் காணப்பட்டனர்.


மேலும் விசாரணையில், ஷியாம்பிஹாரியின் மனைவிதான் அந்த பாதிக்கப்பட்ட பெண் குசுமா தேவி என்று தெரிய வந்தது. மேலும், இந்த நிகழ்வு கடந்த ஜூலை 14 ஆம் தேதி உத்தர பிரதேசம், ஆக்ரா அருகே உள்ள அர்செனா கிராமத்தில் நடைபெற்றதாக தெரிகிறது.


இது குறித்து , சிக்கந்த்ரா காவல் நிலைய பொறுப்பாளர் ஆனந்த் குமார் ஷாஹி கூறுகையில்,


மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் 'இந்த' பழத்தின் விதைகளை தூக்கி எறியாதீர்கள்


"இந்த சம்பவம் ஆக்ராவில் உள்ள சிக்கந்த்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அர்சேனா கிராமத்தில் ஜூலை 14 அன்று நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ புதன்கிழமை சமூக ஊடக தளங்களில் வெளிவந்தது. வீடியோவில் உள்ள நபர், பாதிக்கப்பட்ட குசுமா தேவியின் கணவர் ஷியம்பிஹாரி என அடையாளம் காணப்பட்டார்," என்று அவர் கூறினார்.


மேலும், ஷியாம்பிஹாரி மற்றும் அவரது தாயார் பர்ஃபா தேவி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 342 (தவறான காயப்படுத்தும் அத்துமீறல்) மற்றும் 354 (ஒரு பெண்ணின் மரியாதையை சீர்குலைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஷாஹி கூறினார்.


 



முன்னதாக குசுமா தேவி தனது புகாரில், தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை முன் தினம் தாக்கியதாகவும், அது குறித்து காவல்துறையில் புகார் செய்ய வேண்டாம் என்று இருவரும் மிரட்டியதாகவும் கூறியிருந்தார். ஆனால் கணவன், மாமியாருக்கு தெரியாமல் குசுமா தேவி தனக்கு நடந்த வன்முறை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவருக்கு மீண்டும் குசுமா தேவியை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக தெரிய வந்தது.


இந்நிலையில் கணவன், மாமியார் இருவரும் போலீஸாருக்கு பயந்து ஊரைவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர் என்றும், விரைவில் இருவரையும் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த இயற்கை பானத்தின் உதவியுடன் எடை குறைக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ