விராட் கோலி - அனுஷ்காவின் வைரலாகும் ஹனிமூன் புகைப்படம்!
புதுமண தம்பதிகளான விராத் கோஹ்லி மற்றும் அனுஷ்கா-வின் தேனிலவு செல்பி படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாள்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த திங்கள்கிழமை அன்று இத்தாலியில் உள்ள டஸ்கன் ரிசார்டில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, இவர்கள் இரு இடங்களில் திருமண வரவேற்புகளை நடத்துகின்றனர். வரும் 21-ஆம் தேதி டெல்லியிலும், 26-ஆம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது. இதனிடையே புதுமணத் தம்பதியினர் தேனிலவுக்காக சென்றுள்ள செல்பி படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வெளியான 2 மணி நேரத்திற்குள் மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.
மேலும் இந்தப் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் திருமணத் தம்பதிகளை வாழ்த்தி உள்ளனர். மேலும் சிலர், ஹனிமூன் கொண்டாட்டமா? என்றும் அவர்களை கலாய்த்தும் வருகின்றனர்.
அதில் சொர்க்கத்தில் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த இடம் என்று தெரியவில்லை. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. புத்தாண்டை புதுமணத் தம்பதி தென்னாப்பிரிக்காவில் கொண்டாடவுள்ளனர். இதன் பின்னர் மும்பை கோடிக்கணக்கான மதிப்பில் வாங்கியுள்ள சொகுசு அப்பார்ட்மென்ட்டில் குடியேற போகின்றனர் என்றும் கூறிவருகின்றனர்.