குடி தண்ணீரை பிடித்து தனது காரை கழுவியதாக இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இங்கிலாந்தில் தற்போது உலக கோப்பை தொடருக்கான சுற்றுப்பயணத்தில் உள்ளார். இம்முறை எப்படியும்  கோப்பையை வென்று விடும் முனைப்பில் இந்திய அணி விளையாடி கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் விராட் கோலிக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.


ஹரியானாவின் குருகிராமில் உள்ள கோலியின் அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 


ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள விராட் கோலி வீட்டில் இருக்கும் ஆறு கார்களை கழுவ சுமார் ஆயிரம் லிட்டருக்கு குடிதண்ணீரை அவரது வீட்டின் பணியாட்கள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மட்டுமின்றி  இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில், ஹரியாணா மாநிலமும் இதற்கு தப்பிக்கவில்லை. 


கோலியின் வீடு போலவே இங்கே 10 வீடுகளுக்கு இதேபோன்று அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மற்றவர்கள் குடிதண்ணீரை வீணாக்க மாட்டார்கள் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கார்ப்பரேஷன் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.