தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி  4.5 ரூபாய் கோடி கடன் வாங்கி மோசடி நடைபெற்றுள்ளதாக வீரேந்திர சேவாக்கின் மனைவி புகார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி தொழில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிஸ்னஸ் செய்து வந்துள்ளார். இதை தொடர்ந்து, தொழில் கூட்டாளிகள் ஆர்த்தியின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளனர். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஆர்த்தியையும் வசமாக சிக்க வைத்துள்ளனர். 


இந்நிலையில் டெல்லி போலீசில் அவர் கொடுத்துள்ள புகாரில், நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள 8 பேர், தமது கையெழுத்தை போலியாக போட்டு, நிறுவனம் ஒன்றிடம் இருந்து 4.5 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளனர் என்றும், அந்த பணத்திற்காக அவர்கள் இரு காசோலைகளை கொடுத்துள்ளனர் என்றும், ஆனால் கடனை கட்டாததால்,  நிதி நிறுவனம் வழக்கு தொடுத்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.



இந்த வழக்கு விசாரணையின் போது, காசோலைகளில் தமது கையெழுத்து இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது என்றும், ஆனால் அது தம்முடைய கையெழுத்து இல்லை என்றும், இதர பங்குதாரர்கள், தமது கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்து உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து டெல்லி போலீசார், இந்திய குற்றவியல் சட்டம் 420, 468, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.