பொறுத்தது போதும் இனியும் பொறுக்க முடியாது; 18 மாதத்தில் ராமர் கோவில் பணி தொடங்கும்: VHP
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் பொறுத்தது போதும். இனியும் பொறுமை காக்க முடியாது என விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.
புது டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் பொறுத்தது போதும். இனியும் பொறுமை காக்க முடியாது. இன்னும் 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்குவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் 30 ஆண்டுகளாக பொறுத்தது போதும். இனியும் பொறுமை காக்க முடியாது. இன்னும் 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்க உள்ளோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து இரண்டாது முறையாக பிரதமராக வந்திருக்கும் மோடிக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். மேலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் ராமர் கோயில் விவகாரம் இடம் பெற்றிருக்கிறது என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.
வரும் மே 19, 20 தேதிகளில் விஸ்வ இந்து பரிசத்தின் மார்க்தர்ஷக் சமிதியின் கூட்டம் ஹரித்துவாரில் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்படும். ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.