கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக விஷ்வேர்வர் ஹெக்டே ககேரி தேர்வு!!
கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஷ்வேர்வர் ஹெக்டே ககேரி ஒருமனதாகத் தேர்வு!!
கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஷ்வேர்வர் ஹெக்டே ககேரி ஒருமனதாகத் தேர்வு!!
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து ரமேஷ்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தற்போது விஷ்வேர்வர் ஹெக்டே ககேரி புதிய சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத 17 எம்.எல்.ஏ.க்களை, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.
மேலும், 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட இவர்களுக்குத் தடைவிதித்தும் அவர் உத்தரவிட்டார். 17 பேர் தகுதி நீக்கத்தால் கர்நாடக சட்டப்பேரவை பலம் 208 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 105 உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி 14 எம்.எல்.ஏக்கலும் சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஸ்வர் ஹெக்டே ககேரி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.