ஐஸ்வர்யா மீம்ஸ் விவகாரத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார் விவேக்
ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி வந்த மீம்ஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததற்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் விவேக் ஓப்ராய்!
ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி வந்த மீம்ஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததற்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் விவேக் ஓப்ராய்!
தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், இதனை விமர்சிக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி மீம்ஸ் ஒன்று இணையத்தில் வெளியானது., இந்த மீம்ஸில் தவறு ஏதும் இல்லை என நடிகர் விவேக் ஓபிராய் விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து விவேக் ஓப்ராய் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தனது கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு கோரி, தனது ட்விட்டினையும் நீக்கியுள்ளார் விவேக் ஓப்ராய். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "சில சமையங்களில் நகைச்சுவை என நாம் கருதும் விஷயம் பலருக்கு காயம் ஏற்படுத்தலாம். அந்த வகையில் என்னுடைய நகைச்சுவை பலரை காயப்படுத்தியது என்றால் அதற்கு நான் வருந்துகிறேன். பல ஆண்டு கால உழைப்பிற்கு பின்னால் சேர்த்த ரசிகர்களை இந்த ஒரு பதிவால் இழக்க நேரிட்டது வருத்தமளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. இதில், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பலர் விமர்சித்தும், வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கருத்துக் கணிப்பை விமர்சிக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி மீம்ஸ் ஒன்று இணையத்தில் வெளியானது. ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரித்து இந்த மீம்ஸ் இடம்பெற்று இருந்தது.
அதாவது., ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓப்ராய் உள்ள படத்தை தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தை தேர்தல் முடிவுகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் ஆகிய இருவரும் காதலிப்பதாக 2000-ஆம் ஆண்டுகளில் செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் 2002-ல் பிரிந்தாக கூறப்பட்டது. பின்னர் ஐஸ்வர்யா ராய், விவேக் ஓப்ராயைக் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுவும் பிரிவில் முடிந்ததாக தகவல்கள் வந்தன.
பின்னர், கடந்த 2007-ஆம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக வெளியான மீம்ஸை நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தனது செயலுக்கு விளக்கம் அளித்த விவேக் ஓப்ராய்., நான் செய்ததில் தவறு என்ன இருக்கிறது. மன்னிப்பு கேட்க எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை, ஆனால் நான் என்ன தவறு செய்தேன் மன்னிப்பு கேட்பதற்கு. ஏன் மக்கள் இந்த விவகாரத்தை பெரிதாக பார்க்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை. தேவையில்லா பிரச்சனையினை உண்டாக்கி எனது திரைப்படத்தை நிறுத்த எதிர்கட்சியினர் செய்யும் சதியே இது என குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது தனது செயலுக்கு விவேக் ஓப்ராய் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.