நாளை கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல் வாக்குப் பதிவில் வெற்றியை உறுதி செய்வதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்திய தோல்விகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் மீண்டு வர விரும்புகிறது. 2024 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு கர்நாடகா வெற்றி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து அதிகாரத்தை மீட்டெட்டுக்க, காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் வெற்றி பெறுவது அவசியம். கர்நாடகாவில் வெற்றியை உறுதி செய்வதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட சமீபத்திய தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெறவும், பாஜகவுடன் முழு வீச்சுடன் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் போருக்குத் தயாராக இருப்பதையும் தற்போதைய எதிர்கட்சி உறுதி செய்யவேண்டும்.


எனவே, காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் உள்ளூர் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தியதுஅத. அதேபோல, தொடக்கத்தில் மாநில தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசாரம், கட்சியின் தேசியத் தலைமையை சேர்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது.


மல்லிகார்ஜுன் கார்கே


ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா என மூத்தத் தலைவர்கள் அடுத்தடுத்து களமிறங்கினர். கலபுர்கி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், இந்தியாவின் பழமையான கட்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு கௌரவப் போர் என்று சொன்னால் அது மிகையாகாது.  


மேலும் படிக்க | பாஜக சார்பில் கர்நாடக மக்கள் போட்டியிடும் தேர்தல் இது: பிரதமர் மோடி


கோஷ்டி பிரிவினைக்கு பேர் போன காங்கிரஸ் கட்சி, அந்த சவாலை எதிர்க்கொண்டாலும், அதை வெற்றிகரமாக கையாண்டது. முதல்வர் பதவி வேண்டும் என்ற வேட்கையில் இருக்கும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் என இரு முகாம்களுக்கு இடையிலான கோஷ்டி பூசல்களை சமாதானப்படுத்தி, எந்த பிளவும் வெளியில் வராமல், தனது வாய்ப்புகளைத் தடம் புரளாமல் பார்த்துக் கொண்டது.


ஆரம்பத்தில் சித்தராமையா மற்றும் சிவக்குமார் போன்ற மாநிலத் தலைவர்களை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், கார்கே பிரசாரத்தை துரிதப்படுத்தினார் என்றே சொல்லலாம். கட்சியின் உயர்மட்ட தலைவர்களான ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கி, தேர்தல் ஆடுகளத்தை தயார் செய்தார் காங்கிரஸின் தேசியத் தலைவர்.


அண்ணனும் தங்கையும் மாநிலம் முழுவதும் விரிவாகப் பயணம் செய்து, பாஜகவுக்கு சவால் விடுத்தனர். மோடி தலைமையிலான பிரச்சார இயந்திரங்களை எதிர்கொண்டு சவால் விடுத்த காங்கிரஸின் அண்ணன் தங்கை ஜோடியுடன் இணைந்தார் தாய் சோனியா காந்தி. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரு நாட்களுக்கு முன்னர் ஹுப்பள்ளியில் நடைபெற்ற கட்சி பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.


மேலும் படிக்க | பாஜகவின் ஊழல் பயங்கரவாதம்! நாட்டின் சொத்துக்களை விற்கும் கட்சி! காங்கிரஸ் புகார்


கட்சி அதன் உயர்மட்ட மாநில மற்றும் மத்திய தலைவர்களைக் கொண்டு 99 பொதுக் கூட்டங்கள் மற்றும் 33 சாலை நிகழ்ச்சிகளை நடத்தியது. காங்கிரஸ் 150 இடங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதி செய்யுமாறு வாக்காளர்களை வலியுறுத்தி வருகிறது,


இந்த தேர்தலில் பாஜக அரசாங்கத்தை தாக்குவதற்கு காங்கிரஸின் முக்கிய பிரச்சனைகள் ஊழல்/ மோசடிகள் மற்றும் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு, அதானி விவகாரம் ஆகியவையாகும்.


தேர்தல் உத்தரவாதங்கள்


ஐந்து முக்கிய தேர்தல் 'உத்தரவாதங்களை' அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, 2018 தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட "வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது" என்ற பாஜக அரசின் மீதான குற்றச்சாட்டை மக்களுக்குத் தெரிவிப்பதில் வெற்றி பெற்றது.


அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் (க்ருஹ ஜோதி), ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கு ரூ. 2,000 மாதாந்திர உதவி (கிருஹ லட்சுமி), ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. பிபிஎல் குடும்பம் (அன்ன பாக்யா), பட்டதாரி இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 3,000 மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு (இருவரும் 18-25 வயதுக்குட்பட்டவர்கள்) இரண்டு ஆண்டுகளுக்கு (யுவநிதி) ரூ. 1,500 மற்றும் பொது போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் (சக்தி) என்ற தங்கள் வாக்குறுதிகளை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதல் நாளே நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கொடுத்துள்ளது. 


மேலும் படிக்க | கர்நாடக தேர்தலுக்கு கோவாவில் விடுமுறை! முதலமைச்சரின் முடிவால் அமைச்சர்கள் அதிருப்தி


எல்லாம் சரியாகப் போகிறது என்று தோன்றிய நேரத்தில், காங்கிரஸ் கட்சியே சர்ச்சையில் சிக்கியது, “ஏற்கனவே ஒரு லிங்காயத் முதல்வர் ஊழல் செய்தவர்” என்று சித்தராமையா கூறியது, பாஜக ஒட்டுமொத்த லிங்காயத் சமூகத்தையும் அவமதிக்கும் செயலாக மாற்றியது.


மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடியையும், பின்னர் அவரது மகனும், சித்தப்பூர் எம்எல்ஏவுமான பிரியங்க் கார்கேவுக்கு எதிரான 'நாலயக் பீட்டா' (திறமையற்ற மகன்) எனக் கூறிய "விஷப் பாம்பு" போன்ற வசவுகள், பா.ஜ.க.வினரால் ஆயுதமாக எடுக்கப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் ஒரு சலசலப்பை உருவாக்கியது.


இதேபோல, காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் ராகுல் காந்தி சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் அவரது எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்த தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில், பஜ்ரங் தளத்தை தடை செய்ய முன்மொழியப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது, தீங்கு விளைவிக்கும் என சில கவலைகளை ஏற்படுத்தியது, ஏனெனில் பாஜகவும் பிரதமர் மோடியும் காங்கிரஸ் கட்சியை ஹனுமானுக்கு எதிரானது என்றும், இந்துக்களின் உணர்வுகளை மதிக்காத கட்சி என்றும் சித்தரிக்க இந்த பிரச்சினையை ஆக்ரோஷமாக முன்னெடுத்துள்ளனர்.  


தேர்தல் களம் தயார், பிரசாரங்களும் ஓய்ந்தன. இனி நாளை மக்களே மகேசன்கள் என்பதை நிரூபிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நாள். நாளை மக்கள் எழுதும் தீர்ப்பு, இரு நாட்களுக்குப் பிறகு வெளியாகும்போது, கை உயருமா இல்லை தாழுமா என்பது தெரிந்துவிடும்.


மேலும் படிக்க | Karnataka 2023: ‘இறையாண்மைக்கு அச்சுறுத்தல்’ என்று சொன்ன சோனியா காந்தி மீது பாஜக புகார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ