வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? ஆனாலும் ஓட்டு போடலாம்
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இல்லாதவர்கள், வேறு ஏதாவது அவர்களின் அடையாள அட்டையை ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதைக்குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் கூறியதாவது:-
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு பதிலாக கீழ்கண்ட அடையாள அட்டையை ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
* ஆதார் அட்டை
* பாஸ் போர்ட்
* டிரைவிங் லைசென்சு
* புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
* மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு.
* மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட, பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.
* நிரந்தர கணக்கு எண் அட்டை.
* தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணிஅட்டை.
* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
* தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப் படச்சீட்டு.
* பாராளுமன்ற, சட்ட மன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.
மேலும் உங்களுடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் கொண்டு நீங்கள் வாக்கு செலுத்த முடியும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.