சுற்றுலா தலங்களில், பயணியர், 'செல்பி' எடுப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை அடையாளம் காணும்படி அனைத்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்ப்பாக, லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர், ஹன்ஸ்ராஜ் கங்காராம் எழுத்து மூலம் அளித்தார்.


அவர் பதிலளித்த கடித்ததில் கூறி இருப்பது....! 


“சுற்றுலா தலங்களில், ‘செல்பி’ எடுத்தபோது விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, செல்பி எடுப்பதால் விபத்து நேரும் இடங்களை மாநில அரசுகள் அடையாளம் கண்டறிந்து, அங்கு ‘செல்பிக்கு தடை விதிக்கப்பட்ட பகுதி’ என்று எச்சரிக்கை பலகைகள் பொருத்துதல், தன்னார்வ தொண்டர்களை நிறுத்துதல், மைக்கில் எச்சரிக்கை விடுத்தல், தடுப்புகள் அமைத்தல் போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


எனவே, சுற்றுலா தலங்களில், 'செல்பி' எடுப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை அடையாளம் காணும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.