Watch: Republic Day 2021: கடும் குளிரில் தேசியக்கொடியுடன் அணிவகுத்த ITBP வீர்ரகள்
தினசரி வேலைகளை செய்வதே பெரும் சவாலாக இருக்கும் கடும் குளிர் மற்றும் அசாதாரண சூழலிலும் வீரர்கள் கொடியுடன் அணிவகுத்துச் சென்றது, அவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஒரு அடையாளமாக இருந்தது.
லடாக்: இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு லடாக்கில், இந்தோ-திப்பெத் எல்லை காவல்படை (ITBP) வீர்ரகள், தேசியக் கொடியுடன் அணிவகுப்பை மெற்கொண்டனர். தினசரி வேலைகளை செய்வதே பெரும் சவாலாக இருக்கும் கடும் குளிர் மற்றும் அசாதாரண சூழலிலும் வீரர்கள் கொடியுடன் அணிவகுத்துச் சென்றது, அவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஒரு அடையாளமாக இருந்தது.
வீரர்கள் கடும் பனிக்கும் குளிருக்கும் இடையில் தேசியக் கொடியை (National Flag) அசைத்து தங்கள் நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டினர்.
குடியரசு தினத்தை (Republic Day) கொண்டாடுவதற்காக ITBP வீரர்களின் பட்டாலியன் லடாக்கில் உறைந்த பனிமலைகளுக்கு இடையில் இந்திய தேசியக் கொடியுடன் அணிவகுப்பை நடத்தினர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குகொண்ட ITBP படையினரின் மற்றொரு பட்டாலியன், யூனியன் பிரதேசத்தின் மற்றொரு உயரமான எல்லை புறக்காவல் நிலையத்தில் 72 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடியது.
திங்களன்று குடியரசு தினத்தை முன்னிட்டு, 17 ITBP பணியாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போலீஸ் சேவை பதக்கங்கள் வழங்கப்பட்டன.
உதவி கமாண்டன்ட் அனுராக் குமார் சிங் மற்றும் துணை கமாண்டன்ட் ராஜேஷ் குமார் லுத்ரா ஆகிய இரு அதிகாரிகள் துணிச்சலுக்கான போலிஸ் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டனர். மூன்று பேருக்கு புகழ்பெற்ற சேவைக்கான ஜனாதிபதி பொலிஸ் பதக்கமும், 12 பேருக்கு சிறப்பான சேவைக்கான போலிஸ் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
ITBP குழு செவ்வாய்க்கிழமை குடியரசு தின அணிவகுப்பின் ஒரு பகுதியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா?
ALSO READ: குடியரசு தினத்தன்று முதல் முறையாக ரஃபேல் காணப்படும், எப்போது, எங்கு பார்க்க முடியும்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR