வீடியோ: குஜராத்தில் ”ஹாயாக உலா வரும் சிங்கங்கள்”
குஜராத் ஜூனாகத் பகுதியில் உள்ள சாலைகளில் 8 சிங்கங்கள் குட்டிகளுடன் உலா வருவதால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள ஜூனாகத் நகர வீதியில் இரவு நேரங்களில் 8 சிங்கங்கள் உலாவி வருவதாக அந்த நகர பகுதி மக்கள் கூறியுள்ளனர். சிலர் இந்த சிங்கங்களை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினர். இரவு நேரங்களில் சிங்கங்கள் உலாவி வருவதால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அஞ்சுகின்றனர். மேலும் சிங்கங்களை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமரெலி மாவட்டத்தில் 3 சிங்கங்கள் சேர்ந்து ஒரு மனிதரை தாக்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் சிங்கங்களால் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.