வாயிற்காவலரை அடித்த மத்திய மந்திரியின் ஊழியர்
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மகேஷ் சர்மா. இவர் காரில் வந்தபோது வாயிற்காவலர்கள் கதவை திறக்க தாமதமானது. இதனால், அமைச்சரின் கார் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த அமைச்சரின் பணியாளர் அந்த வாயிற்காவலரை அடித்துள்ளார்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு தனது காசியாபாத்தில் உள்ள தனது சகோதரியை சந்திக்க அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் போது, இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.
அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் மகேஷ் சர்மா சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து மகேஷ் சர்மா கூறும் போது:- குற்றத்தை யார் செய்திருந்தாலும், வாயிற்காவலர் தாக்கப்பட்டதற்காக தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், அவர்களைத் தாக்கிய தனது பாதுகாவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ:-