Wayanad by-election: யார் இந்த நவ்யா ஹரிதாஸ்? பிரியங்காவை தோற்கடிக்க பாஜக புதிய யுக்தி!
Navya Haridas: வயநாடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட உள்ளார். அவரை பற்றிய கூடுதல் விவரங்கள்.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். அதே நேரத்தில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார். அக்டோபர் 19, சனிக்கிழமையன்று பாஜக வெளியிட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு 2021ல் கோழிக்கோடு தெற்கு என்ற இடத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட்டார், ஆனால் வாக்குகள் எண்ணப்பட்டபோது அவர் மூன்றாவது இடத்தில் இருந்தார். கோழிக்கோட்டில் கூட்டுறவு கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார் நவ்யா ஹரிதாஸ். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் இவரை பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஒரு குவாட்டரின் விலை ரூ.99... சொன்னதை செய்யும் மாநில அரசு!
நவ்யா ஹரிதாஸ் தனது பொறியியல் பட்டப்படிப்பை 2007ல் கோழிக்கோடு கல்லூரியில் முடித்தார். இப்போது, 39 வயதாகும் அவர், 2021 தேர்தலில் கோழிக்கோடு தெற்கு பகுதியில் 24,873 வாக்குகள் பெற்றார். அதே தேர்தலில் இந்திய தேசிய லீக்கைச் சேர்ந்த அகமது தேவர்கோவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நூர்பினாவை விட 12,459 வாக்குகள் அதிகம் பெற்று மொத்தமாக 52,557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நவ்யா ஹரிதாஸ்க்கு அரசியலில் நிறைய அனுபவம் இருக்கிறது. மேலும், நவ்யா ஹரிதாஸ் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. அவர் தற்போது பாஜக மகிளா மோர்ச்சாவின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார், இது பாஜக கட்சியில் உள்ள பெண்களுக்கான குழுவாகும்.
காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு வயநாடு ஏன் முக்கியமானது?
வயநாடு தொகுதி இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான பிஜேபி மற்றும் காங்கிரஸுக்கு மிகவும் முக்கியமானது, அவர்கள் இருவரும் இங்கு வெற்றிபெற விரும்புகிறார்கள். 2024 மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். பின்பு வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவது குறித்து நீண்ட நாட்களாக பலரும் பேசி வந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.
நவம்பர் 13-ம் தேதி வயநாடு பகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை தேர்தலில் போட்டியிட உள்ளதால் ஸ்டார் தொகுதியாக மாறியது. பாஜக சார்பில் பிரியங்கா காந்திக்கு எதிராக நடிகை குஷ்பு போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. சில மலையாள செய்தி சேனல்கள் அவர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக கூறியது, ஆனால் இது உண்மையல்ல என்று குஷ்பு கூறினார். தேர்தலின் போது, இதுபோன்ற பொய்யான கதைகளை மக்கள் அடிக்கடி கேட்பதாகவும், தற்போது அது மீண்டும் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேரளாவின் வயநாட்டில் நான் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது, ஆனால் எனது கட்சித் தலைவர்கள் இது குறித்து என்னிடம் இதுவரை பேசவில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | விரைவில் மூடப்படும் ஜியோ சினிமா! முகேஷ் அம்பானியின் முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ