ராம் ஜன்மபூமி-பாபர் மஸ்ஜித் நில தகராறு வழக்கில் ஆகஸ்ட் 6 முதல் அன்றாட விசாரணைகளைத் தொடங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதித்யநாத், உச்சநீதிமன்றம் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி வரவேற்கத்தக்க நடவடிக்கை, ஆனால் அது எந்த விளைவையும் தராது என்பதை மக்கள் அறிவார்கள் என விமர்சித்துள்ளார்.


"உச்சநீதிமன்றம் மத்தியஸ்தத்திற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது (அயோத்தி நில தகராறு தொடர்பாக), அது தோல்வியுற்றது. ஏற்கனவே மத்தியஸ்தம் முடிவு எந்த பயனும் அளிக்காது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் மத்தியஸ்தத்திற்கான முயற்சிகள் நல்லது. மகாபாரதத்திற்கும் முன்பாக மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவற்றின் முடிவு பயனற்று போனது என தெரிவித்தார்.


1949-இல் தொடங்கிய ராம் லல்லாவின் பயணம் கடைசி மூச்சு வரை தொடரும் என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார். 1990-ல் முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர் சேவகர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.


20 ஆண்டுகளுக்கும் மேலாக விஸ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச செயல்பாட்டுத் தலைவரும், அயோத்தி இயக்கத்தின் பொறுப்பாளருமான அசோக் சிங்கலை நினைவு கூர்ந்த ஆதித்யநாத், “அசோக் சிங்கால் ராம் ஜன்மபூமி இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தார். எல்லா புனிதர்களையும் அழைத்துச் செல்வது ஒரு பெரிய விஷயம். எனது குரு மகந்த் திக்விஜய் நாத்தும் இந்த இயக்கத்துடன் இணைக்கப்பட்டார். பொதுமக்களின் உணர்வுகளை உச்ச நீதிமன்றம் கவனிக்கும் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்தார்.


ராம் மந்திர் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த மறைந்த பரம்ஹான்ஸ் ராம் சந்திர தாஸின் மரண ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆதித்யநாத் இன்று அயோத்திக்கு வந்தடைந்தார். 2017-ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற பின்னர் 8-வது முறையாக இங்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.