புதுடெல்லி: கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கு தனது அரசாங்கம் தயாராகி வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டெல்லிக்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் மத்திய அரசிடம் கோரியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"நாங்கள் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரித்து வருகிறோம். மூன்றாவது அலைக்கு நாங்கள் தயாராக வேண்டும். இரண்டாவது அலையில், டெல்லியின் ஒரு நாள் அதிகபட்ச தொற்று பாதிப்பின் அளவு 28,000 ஆக இருந்துள்ளது.  நாங்கள் உருவாக்கி வரும் உள்கட்டமைப்பின் அடிப்படையில், 30,000 என்ற எண்ணிக்கையில் ஒற்றை நாள் தொற்றின் அளவு இருந்தால் அதை எங்களால் சமாளிக்க முடியும்." என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.


தடுப்பூசி (Vaccine) பற்றாக்குறை பிரச்சினை பற்றி கூறிய ஆம் ஆத்மி தலைவர், “இன்னும் 3-4 நாட்களுக்கான தடுப்பூசி கையிருப்புதான் எங்களிடம் உள்ளது. நாங்கள் நிறுவனங்களிடம் ஆர்டர்களை கொடுத்துள்ளோம். ஆனால் மத்திய அரசுதான் மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒரு மாதத்தில் கிடைக்கும் தடுப்பூசி அளவு பற்றி மத்திய அரசிடமிருந்து ஒரு கடிதம் எங்களுக்கு கிடைக்கிறது. எங்களுக்கு அதிகமான தடுப்பூசிகளை வழங்குமாறு மையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.


முன்னதாக இன்று கெஜ்ரிவால் மற்றும் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ஜிடிபி மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு கோவிட் பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தனர். டெல்லியில் திங்களன்று COVID-19 தொற்றுநோயால் மேலும் 319 பேர் இறந்தான்ர். 12,651 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இது நான்கு வாரங்களில் மிகக் குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மறை விகிதம் 19.10 சதவீதமாக உள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


ALSO READ: தொடர்ந்து மிரட்டும் கொரோனா, டெல்லியில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு


புதிய தொற்றின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான (66,234) சோதனைகளுக்கும் இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. அரசாங்க தரவுகளின்படி, ஏப்ரல் 16-க்குப் பிறகு 19.10 என்ற தற்போதைய பாசிடிவிடி ரேட் மிகவும் குறைவான விகிதமாகும். ஏப்ரல் 16 அன்று இந்த விகிதம் 19.7 ஆக இருந்தது. ஏப்ரல் 17 முதல் நேர்மறை விகிதம் 20 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது. 


ஞாயிற்றுக்கிழமை 21.67 சதவீதமாக இருந்த நேர்மறை விகிதம், சனிக்கிழமை 23.34 சதவீதமாகவும், வெள்ளிக்கிழமை 24.92 சதவீதமாகவும், வியாழக்கிழமை 24.29 சதவீதமாகவும், புதன்கிழமை 26.37 சதவீதமாகவும், செவ்வாயன்று 26.73 சதவீதமாகவும், கடந்த திங்கட்கிழமை 29.56 சதவீதமாகவும், கடந்த ஞாயிறன்று 28.33 சதவீதமாகவும் கடந்த சனிக்கிழமையன்று 31.6 சதவீதமாகவும் இருந்தது.


டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 13,336 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். சனிக்கிழமையன்று 17,364 பேரும், வெள்ளிக்கிழமை 19,832 பேரும், வியாழக்கிழமை 19,133 பேரும், புதன்கிழமை 20,960 பேரும், செவ்வாய்க்கிழமை 19,953 பேரும், கடந்த திங்கட்கிழமை 18,043 பேரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 20,394 பேரும் கடந்த சனிக்கிழமை 25,219 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


டெல்லியில்  ஞாயிற்றுக்கிழமை 273 பேர் கொரோனா தொற்றால் (Coronavirus) இறந்தனர். சனிக்கிழமையன்று 332, வெள்ளியன்று 341, வியாழக்கிழமை 335, புதன்கிழமை 311, செவ்வாயன்று 338, கடந்த திங்கட்கிழமை 448, கடந்த ஞாயிற்றுக்கிழமை 407, கடந்த சனிக்கிழமை 412 பேர் இறந்ததாக சுகாதாரத் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 57,265 ஆர்டிபிசிஆர் / சிபிஎன்ஏடி / ட்ரூ நாட் சோதனைகள் உட்பட 66,234 சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் சுமார் 13,300 க்கும் மேற்பட்டோர் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. நகரில் 85,258 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 52,451 வீட்டுத் தனிமையில் உள்ளனர். 


ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 13,36,218 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 19,663 ஆகவும் உள்ளது. 12.31 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார புல்லட்டின் தெரிவித்துள்ளது. நகரில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான 22,667 மருத்துவமனை படுக்கைகளில், 3,229 படுக்கைகள் காலியாக உள்ளன.


ALSO READ: 42 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 100,000 Oxygen Cylinders கிடைக்கும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR