தொடர்ந்து மிரட்டும் கொரோனா, டெல்லியில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவதால், மருத்துவமனை நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 9, 2021, 12:44 PM IST
தொடர்ந்து மிரட்டும் கொரோனா, டெல்லியில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு title=

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவதால், மருத்துவமனை நிர்வாகங்கள் திணறிவருகின்றன. 

கொரோனா பரவலை (Coronavirus) கட்டுப்படுத்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஊரடங்கு (Lockdown) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு மீண்டும் மே 1 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசால் ஏற்படும் அழிவு தொடர்கிறது. எனவே, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது.,
டெல்லி ஊரடங்கு மே 17 வரை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது; இந்த காலகட்டத்தில் டெல்லி மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட உள்ளன. தற்போது டெல்லியில் 18 வயதுக்கு மேல உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பள்ளிகளில் சிறந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். தடுப்பூசிகளின் பற்றாக்குறை உள்ளது, ஆனால் மத்திய அரசு நமக்கு உதவும் என்று நம்புகிறேன். 

ALSO READ | Delhi Oxygen: தேவைக்கும் அதிகமாக ஆக்சிஜன் கொடுத்த மத்திய அரசுக்கு கேஜ்ரிவால் மனமுருகி நன்றி

 

 

 

 

எங்கள் மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்கவும் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தினோம். டெல்லியில் ஆக்ஸிஜன் நிலைமை மேம்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து SOS அழைப்புகளை குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 332 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம், டெல்லியில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கைகள் 13 லட்சம் 10 ஆயிரம் 231 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர, மொத்த இறப்பு எண்ணிக்கை 19,071 ஐ எட்டியுள்ளது. டெல்லியில் இதுவரை 12 லட்சம் 3 ஆயிரம் 253 நோயாளிகள் குணமாகியுள்ளனர்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News