ரமல்லா: பாலஸ்தீன நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவர்கள் இன்று அந்நாட்டு அதிபர் மகமூத் அப்பாசை சந்தித்து பேசினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். சந்திப்பிற்கு பின்னர் பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.


விருது பெற்ற பின்னர் பிரதமர் பேசுகையில்... பாலஸ்தீனம் இந்தியாவிற்கு மரியாதை செலுத்தியுள்ளது. இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் எனக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது பாலஸ்தீனம் நாட்டினுடன் இந்திய நாட்டின் நட்பின் அடையாளம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து பேசுகையில் அவர்,... இந்திய வெளியுறவு கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு எப்பொழுதும் உயரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் விரைவில் அமைதியான முறையில் சுதந்திர நாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



மற்ற நாட்டு கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை மாணவர்கள் கற்றுக்கொள்ளம் வகையில் இந்திய தரப்பில் இருந்து பாலஸ்தீன நாட்டிற்கு வருடாந்திரம் 50 பேர் அனுப்ப படுவது., இந்தாண்டு 100-ஆக உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.