புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ - JNU) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்தவர்களின் படங்களை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தில்லி போலீசார் வெளியிட்டனர். அதில் ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் தலைவர் ஆயி கோஷ் (Aishe Ghosh) உட்பட 9 மாணவர்களின் புகைப்படங்கள் உள்ளன. டெல்லி போலீசாரின் குற்றச்சாட்டுகளை குறித்து பேசிய ஜே.என்.யு.எஸ்.யூ தலைவர் ஆயி கோஷ், டெல்லி காவல்துறை தனது சொந்த விசாரணையை மட்டுமே நடத்த முடியும். அவர்கள் பாரபட்சமாக விசாரணை நடத்தி வருகின்றனர் எனக் குற்றம்சாட்டிய ஆயிஷி கோஷ் நான் எவ்வாறு தாக்கப்பட்டேன் என்பதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன எனவும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜே.என்.யு.எஸ்.யூ தலைவர் ஆயிஷி கோஷ் செய்தியாளர் கூட்டத்தில், “நமது நாட்டின் சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. விசாரணை நடுநிலையாக நடைபெறும், எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறினார். ஆனால் டெல்லி காவல்துறை ஏன் ஒரு தரப்புக்கு சாதகமாக இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பிய அவர், இதுவரை எனது புகாரை எஃப்.ஐ.ஆராக பதிவு செய்யப்படவில்லை. நான் யாரையும் அடிக்கவில்லை மற்றும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றுக் கூறினார்.


ஜே.என்.யூ துணைவேந்தரை உடனடியாக தனது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எம்.எச்.ஆர்.டி (MHRD) யிடம் நாங்கள் கோரிகை வைத்துள்ளோம். ஏனென்றால் அவரால் பல்கலைக்கழகத்தை நடத்த முடிய வில்லை என்று மாணவர் சங்கத்தின் தலைவர் ஆயி கோஷ் கூறினார். எங்களுக்கு ஒரு புதிய துணைவேந்தர் தேவை. ஏனென்றால் அவரால் எங்களுக்கு உதவலாம், மேலும் வளாகம் இயல்புநிலைக்கு வரலாம் எனவும் கூறினார்.'


காவல்துறையை பார்த்து எங்களுக்கு பயமில்லை:
இடதுசாரி மாணவர்கள் பேசுகையில், “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. டெல்லி போலீசாரை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் சட்ட வழியில் போராடுவோம். அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் எங்கள் இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம்.'' எனக் கூறினார்கள்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.