மகாத்மாவின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்: பிரதமர் மோடி
நாங்கள் எப்போதும் காந்திஜிக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். அவரின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து கடுமையாக உழைப்போம் என பிரதமர் மோடி ட்வீட்.
புதுடில்லி: இன்று நாடு முழுவதும் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் காந்திஜியின் தேவை நமக்கு இருக்குறது. அவர் உருவாக்க நினைத்த இந்தியா போல, இன்று நம் நாடு இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடை இல்லை என்பதே நிதர்சனம். மிகவும் எளிமையாக அஹிம்சை முறையில் சென்ற காந்தியை உலகமே தெரிந்துக்கொண்டது. நீங்களும் அவரை பற்றி தொடர்ந்து படியுங்கள். தெரிந்துக்கொள்ளுங்கள்....!!
அதேபோல இன்று நாட்டின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்த நாள் ஆகும். இவரின் பிறந்த நாளையும் நாடு கொண்டாடி வருகிறது. இவர் பிரதமராக வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்திஜி அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்திலும், விஜய் காட்டில் அமைந்துள்ள நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதையை செலுத்தி வணங்கினார்.
இவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து மற்றும் மரியாதையை பகிர்ந்துள்ளார்.
மகாத்மா காந்தி......!!
"மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவிற்கு வணக்கம்... "மகாத்மாவின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்" என்றும், மனிதகுலத்திற்கு காந்திஜியின் பங்களிப்புக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என ட்வீட் செய்துள்ளார். அதனுடன், காந்திஜியின் வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
லால் பகதூர் சாஸ்தி.....!!
அதேபோல பிரதமர் நரேந்திர மோடி சாஸ்திரிஜியை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும், அவரின் முக்கிய கோசமான "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" (வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி) எனவும் பதிவிட்டுள்ளார்.