புது டெல்லி: நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,341 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நாட்டில் தற்போதுள்ள கொரோனா (Corona) பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி (PM Modi) அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.


ALSO READ | நாட்டில் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க செய்வதில் அரசு உறுதி: பிரதமர் மோடி


இது குறித்து மத்திய அரசு (Central Government) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். 


மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும் அதன் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளவும் பிரதமர் அறிவுரை வழங்கினார். தடுப்பூசி (Corona Vaccine) உற்பத்தியின் திறனை அதிகரிக்க தேவையான வளங்களை கருத்தில் கொண்டு முழு தேசிய திறனையும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR