சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைத்து மக்களுக்காக செயல்படும் என்று சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பினை அடுத்து மாநிலத்தில் முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்த நிலையில், சிவசேனா தலைமையில் மூன்று கட்சிகளின் கூட்டணி ('மகா விகாஸ் அகதி') அமையவுள்ளது.


செவ்வாய்க்கிழமை இரவு மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரைச் சந்தித்த பின்னர், ஆதித்யா செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில், "மகா விகாஸ் அகாதி உத்தவ் தாக்கரே சாஹேப்பை அவர்களின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. அவர் (ஆளுநர்) இன்று எங்களுக்கு தனது நேரத்தையும், அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பையும் வழங்கினார். மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் ஒரு நிலையான அரசாங்கத்தை வழங்க விரும்புகிறோம். "


தொடர்ந்து பேசிய சஞ்சய் ரவுத்., “மகாராஷ்டிராவை முன்னோக்கி அழைத்துச் செல்ல” கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார். 


தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆளுநரை சந்தித்ததைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை (நவம்பர் 28) மாலை 5 மணிக்கு சிவாஜி பூங்காவில் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. 


மேலும் தாக்கரேக்கு இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்று யூகங்கள் இருந்தாலும், காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத் இதனை மறுத்துள்ளார். இருப்பினும் தாக்கரே பதவியேற்பு நாள் அன்று துணை முதல்வர், அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பர் என அவர் தெரிவித்துள்ளார்.


மகா விகாஸ் அகாதியின் முன்னுரிமையில், சிவசேனா எம்.பி. அப்துல் சத்தார் கூறுகையில், “முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதே எங்கள் நோக்கம். ஒரு சிலரைத் தவிர, மகாராஷ்டிராவின் எஞ்சிய பகுதிகள் இன்று மகிழ்ச்சியாக உள்ளன. அஜித் பவார் பாஜகவுடன் ஏன் கைகோர்த்தார் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்கக் கூடாது. ஷரத் பவார் மட்டுமே அஜித் குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.” என தெரிவித்தார்.


இதனிடையே ராஜ் பவனில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக பாஜக தலைவர் காளிதாஸ் கோலம்ப்கர் பதவியேற்றார். 


288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவுக்கு வியத்தகு முறையில் ஆதரவை வழங்கிய மூன்று நாட்களுக்கு மேலாக கிளர்ச்சி NCP தலைவர் அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து அடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.