நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் - பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்? மும்பையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஜூன் 30 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தானும் பங்கேற்பேன் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்றும், அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நாளை மும்பை வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம். அதன் பிறகு, சட்டமன்றக் கட்சியின் கூட்டம் நடைபெறும், இதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கை முடிவு செய்யப்படும்” என்று ஷிண்டே மும்பைக்கு புறப்படுவதற்கு முன் கவுகாத்தி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“நாங்கள் கிளர்ச்சியாளர்கள் அல்ல. நாங்கள் தான் சிவசேனா. பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாவின் சித்தாந்தத்தையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். இந்துத்துவா சித்தாந்தம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம்” என்று ஏக்நாத் ஷிண்டே கவுகாத்தி விமான நிலையத்தில் கூறினார்.
மேலும் படிக்க: நாங்கள் யாருக்கும் பயப்படப் போவதில்லை. எங்களிடம் தான் பெரும்பான்மை -ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்றிணைந்துள்ள அனைத்து அதிருப்தி எம்எல்ஏக்களும் கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் இருந்து வெளியேறி புதன்கிழமை மாலை விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். நேரடியாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோவாவுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் வியாழன் (ஜூன் 30) அன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள மும்பைக்குச் செல்வார்கள்.
அஸ்ஸாம் மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான மூன்று ஏசி பேருந்துகளில் ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் புறப்பட்டனர். மூன்று பேருந்துகளும் பலத்த பாதுகாப்புடன் 15 கிமீ தொலைவில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்றன. பேருந்துகளுடன் பல துணை வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணி ஆட்சிக்கு எதிராகவும், தற்போது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில், சிவசேனாவின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஜூன் 22 முதல் மும்பையில் இருந்து 2,700 கி.மீ தொலைவில் உள்ள கவுகாத்தியில் முகாமிட்டு இருந்தனர்.
முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே தனது சொந்தக் கட்சி (சிவசேனா) மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் சேர்ந்த 50 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி, நாங்கள் தான் பெரும்பான்மை, நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: என்ன நடந்தாலும்.. உத்தவ் தாக்கரேவுக்கு முழு ஆதரவு உள்ளது: என்சிபி தலைவர் அஜித் பவார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR