என்ன நடந்தாலும்.. உத்தவ் தாக்கரேவுக்கு முழு ஆதரவு உள்ளது: என்சிபி தலைவர் அஜித் பவார்

NCP தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார், "மகாராஷ்டிராவில் எந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும், நாங்கள் உத்தவ் தாக்கரேவுடன் முழுமையாக நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 23, 2022, 08:10 PM IST
என்ன நடந்தாலும்.. உத்தவ் தாக்கரேவுக்கு முழு ஆதரவு உள்ளது: என்சிபி தலைவர் அஜித் பவார் title=

மும்பை: மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் இன்று (வியாழன்) தங்கள் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைமையில் அழைப்பு விடுத்த கூட்டத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 

NCP தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார், "மகாராஷ்டிராவில் எந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும், நாங்கள் உத்தவ் தாக்கரேவுடன் முழுமையாக நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நிலை பலவீனமாகி வருகிறது. ஏனென்றால், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள 41 எம்எல்ஏக்களுடன் சேர மேலும் இரண்டு சிவசேனா எம்எல்ஏக்கள் அசாமில் உள்ள கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றதால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிகாரப் போட்டி! அரசியல் குழப்பம்! முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகுவாரா?

ஷிண்டே மற்றும் அவரது உதவியாளர்கள் காங்கிரஸ் மற்றும் என்சிபி உடனான கூட்டணியை சிவசேனா முடித்துக் கொண்டு, பழைய கூட்டணியான பாஜகவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஷிண்டே கோஷ்டியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது, நிலைமை கைமீறிப் போவதைக் கண்டு, சிவசேனா எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையில், சிவசேனா செய்தி தொடர்பாளரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் ஒரு ட்வீட் செய்துள்ளார், அதில் அவர் "போர்க்கொடி உயர்த்தியுள்ள எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாருங்கள் ஆலோசனை செய்வோம். ஒரு முடிவு எடுக்க வழிவகுக்கும். 

மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் (சிவசேனா+ தேசியவாத காங்கிரஸ்+ காங்கிரஸ்) இருந்து சிவசேனா வெளியேறுவோம். ஆனால் அதற்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் இருந்து மும்பைக்கு வர வேண்டும். அவர்கள் மும்பை வந்து உத்தவ் தாக்கரேவை சந்தித்து நேருக்கு நேர் பேசுவோம். நிச்சயமாக அதனை பற்றி யோசிப்போம். ஆனால் கவுஹாத்தியில் இருந்து கொண்டு வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம்.

மேலும் படிக்க: 46-ஆ? 35-ஆ? உண்மை என்ன.. பாஜக பக்கம் சாய்ந்த 'அந்த' எம்எல்ஏக்களின் முழு பட்டியல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரும் உள்ளனர்.

மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் தலைமை தாங்கும் சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளான என்.சி.பி 53 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளைகே கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 144 இடங்கள் தேவை. 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபைத்தேர்தலில் பாஜக 106 இடங்களை வென்றது. 

மேலும் படிக்க: நான் கடத்தப்பட்டேன்! நான் உத்தவ் தாக்கரேவுடன் இருக்கிறேன்: கட்சிக்கு திரும்பிய சிவசேனா எம்எல்ஏ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News