மேற்கு வங்கம்: 100 வயது பாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்....
நதியா மாவட்டத்தில் 100 வயதுடைய பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞன் கைது....
நதியா மாவட்டத்தில் 100 வயதுடைய பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞன் கைது....
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் வசித்து வரும் 20 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் 100 வயதுடைய பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக நேற்று (புதன்கிழமை) அம்மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு நடந்துள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்ட பெண் அர்கா பிஸ்வாஸ் அபியாஜித் என்ற பாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பாட்டியின் குடும்பத்தினர் அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்தது, குற்றம் சட்டபட்டவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றம் சட்டப்பட்ட 20 வயதுடைய இளைஞர் அர்கா பிஸ்வாஸ்-சை அந்த பாட்டியின் குடும்பத்தினர் அடையாளம் காட்டிய நிலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சக்டா காவல்நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட 100 வயதுடைய பெண்மணியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளி கங்க்பிரசாத் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தனர். தற்போது, அந்த வயதான பெண்மணி சிகிச்சைப் பிரிவிலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.