சிலிகுரி: மேற்கு வங்காளம் மாநிலம் - நேபாளம் எல்லைப்பகுதியில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை சேர்ந்த மூன்று பேரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவயது முதல் 14 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தா நகரின் புறநகர் பகுதியான பேஹாலா மற்றும் வடக்கு 24-வது பர்கானா மாவட்டம் சேர்ந்த சில நர்சிங் ஹோம் மற்றும் வீடுகளில் சி.ஐ.டி, போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த தொழிலுக்காகவே தொண்டு நிறுவனம் என்ற பெயரில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்றுவந்த சோனாலி மொண்டல், சந்தனா சக்ரபார்த்தி, மனாஸ் போவ்மிக் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


இந்நிலையில், இவர்களுக்கு உடந்தையாக குற்றச்சாட்டின் பேரில் நேபாளம் - மேற்கு வங்காளம் மாநிலம் எல்லைப்பகுதி அருகே வசித்துவரும் பா.ஜ.க. மகளிரணி தலைவி ஜுஹி சவுத்ரி என்பவரை நேற்றிரவு போலீசார் கைது செய்துள்ளனர்.


மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ரூபா கங்குலியும் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான மகளிரணி தலைவியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.