வன்முறைக்கான ஆதாரங்களை கொடுங்கள் மோடி ஜி; இல்லையெனில் சிறைக்கு செல்வீர்: மம்தா
திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதர்க்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரை நான் சிறைக்கு தள்ளுவேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று (வியாழக்கிழமை) மதுரா பூரில் தேர்தல் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மீண்டும் தேர்தல் ஆணையம் மற்றும் மோடி அரசசை கடுமையாக தாக்கி பேசினார். கொல்கத்தாவில் அமித் ஷாவின் சாலை பேரணி நிகழ்ச்சியில் ஏற்ப்பட்ட வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரை நான் சிறைக்கு தள்ளுவேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது அக்கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய மோதலில் வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிலை இடிப்புக்கு இரண்டு கட்சிகளும் பாஜக (Bharatiya Janata Party) மற்றும் டிஎம்சி (All India Trinamool Congress) மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும். அதற்கான அனைத்து வேலைகளையும் பாஜக செய்யும். இந்த சிலை உடைப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறினார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிக்கு பதில் அளித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டற்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் எனக் கூறும் பிரதமர் மோடி, அதற்க்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரை நான் சிறைக்கு தள்ளுவேன். எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.