ஆங்கில வழி அரசு பள்ளிகளை திறக்க மேற்குவங்க அரசு திட்டம்!
திரினாமுல் காங்கிரஸ் ஆட்சியில் 47 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க கல்விதுறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம்: திரினாமுல் காங்கிரஸ் ஆட்சியில் 47 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க கல்விதுறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
தெற்கு கொல்கத்தாவின் பெஹெல்லா பகுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்துணர்சி நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பார்த்தா சாட்டர்ஜி, திரினாமுல் காங்கிரஸ் ஆட்சியில் 47 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 40 கல்லூரிகளுக்கு முதுகலை பாடப்பிரிவுகள் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்விதுறையினை முன்னேற்றங்கள் கொண்டு வர மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் அடிப்படையிலேயே இந்த கல்லூரிகளுக்கு முதுகலை பாடப்பிரிவிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே வேலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆங்கில வழி கல்வி பள்ளிகள் செயல்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் எத்தனை பள்ளிகள் என்ற எண்ணிக்கையினை அவர் குறிப்பிடவில்லை.
இந்த பட்டியளிலில் இடம்பெறும் பள்ளிகளில் சில ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களில் இயங்கும் எனவும், மீதமிறுக்கும் பள்ளிகளுக்கான பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும் எனவும் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளும் பெற வேண்டும் என்பதாலே இந்த ஆங்கில வழி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.