40 வருட பழமையான பாலம். தற்போது வரை இறப்பு எதுவும் இல்லை, ஆனால் மீட்பு பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என மேற்கு வங்க மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



 



 



 



நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். மீட்புக் குழுவினரின் தகவலை நாங்கள் பெற்றுள்ளோம். நான் விரைவில் அங்கு செல்ல உள்ளேன் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.


 




விபத்து ஏற்ப்பட்ட இடத்திற்கு விரைந்தனர் ராணுவ வீரர்கள் மீட்பு பணி ஈடுபட்டு உள்ளனர். 


 



 



மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மஜர்ஹாத் பாலம் சரிந்தது விபத்துக்குள்ளாகி உள்ளது. அந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுக்கொண்டு இருக்கும் விபத்து ஏற்ப்பட்டது. இந்த பாலம் இடிந்த விழுந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். இந்த பாலம் மிகவும் பழமை வாய்ந்தது. 


 



 



தற்போது இந்த பாலத்திற்க்கு அருகில் ரூ. 340 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விபத்து ஏற்ப்பட்டு உள்ளது. இதுவரை இடுபாடுகளில் சிக்கி இதுவரை ஐந்து பேர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.



விபத்து ஏற்ப்பட்ட இடத்திற்கு மீட்பு குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. மீட்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 


 




இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியது, இந்த இடுபாடுகளில் கார், வேன், பைக் என பல வாகனங்கள் சிக்கி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். நாங்கள் அருகில் தான் வேலை பார்க்கிறோம். சத்தத்தை கேட்டு வந்தோம். மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நாங்களும் உதவிகள் செய்கிறோம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்