West Bengal Lok Sabha Election 2024: பாஜக மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தொண்டர்களுக்கு இடையே புதன்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறை மோதலில் பாஜக பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 7 கட்சித் தொண்டர்களும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 பேர் படுகாயம்.. பாஜக பெண் தொண்டர் உயிரிழப்பு


மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பெண் பாஜக தொண்டர் உயிரிழந்தார். மேலும், ஏழு பாஜகவினர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நந்திகிராமில் உள்ள சோஞ்சூராவில் மே 22 அன்று இரவு நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜக தொண்டர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், நிலைமையைக் கட்டுப்படுத்த மத்தியப் படைகள் குவிக்கப்பட்டன.


கடைகளை எரித்து போராட்டத்தில் பாஜக.. பலத்த பாதுகாப்பு


இன்று (வியாழக்கிழமை) நந்திகிராமில் வன்முறையாளர்களின் தாக்குதலில் ஒரு கட்சித் தொண்டர் இறந்ததைத் தொடர்ந்து, பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், விரைவு அதிரடிப் படையினர் மற்றும் மத்தியப் படையினருடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



நந்திகிராம் காவல் நிலையம் முன்பு காலை முதல் பாஜக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவாரத்தை நடத்தினார். 


மேலும் படிக்க - Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது.. 270க்கு குறையாது -பிரசாந்த் கிஷோர்


அப்பொழுது ரேயபாரா புறக்காவல் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியை பதவி நீக்கம் செய்யவும், வாக்குப்பதிவு நாளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் நந்திகிராமில் மத்தியப் படைகளை நிறுத்தவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்தல் தொடர்பான வன்முறைகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.


மே 25 ஆம் தேதி ஆறாவது கட்ட வாக்குப்பதிவு


கிழக்கு மேதினிபூர் உள்ளிட்ட ஜங்கல்மஹால் மாவட்டம் உட்பட 8 தொகுதிகளில் ஆறாவது கட்டமாக மே 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளாகும். அதற்கு முன்னதாகவே இந்த வன்முறை சம்பவத்தால் மேற்கு வங்க அரசியல் சூழலை சூடுபடுத்தி உள்ளது


தோல்வி நிச்சயம் என்பதால் திரிணாமுல் காங்கிரசார் அராஜகம் -பாஜக குற்றச்சாட்டு


இந்த சம்பவம் குறித்து பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரும், நந்திகிராம் எம்.எல்.ஏ.வுமான சுவேந்து அதிகாரி, "நேற்றிரவு நந்திகிராமில் உள்ள சோனாச்சுராவின் மன்சபஜார் பகுதியில் உள்ள சாவடியில் பாஜகவினர் காவலில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கினர். அதில் 7 பேர் படுகாயமடைந்தனர். ரதிபாலா ஆதி என்ற பெண் உயிர் இழந்தார். தோல்வி நிச்சயம் என்று தெரிந்ததும் திரிணாமுல் காங்கிரஸ் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டு உள்ளது. கொலையையும் செய்துள்ளது. அவர்கள் ஜிஹாதிகள். அவர்கள் ஒரு பெண்ணைக் கொல்லத் தயங்க மாட்டார்கள்" என்று எக்ஸ்ஸில் பதிவிட்டுள்ளார். 


இது பாஜகவின் சதி -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு


பாஜகவின் குற்றச்சாட்டுகளை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), "நந்திகிராமில் நடந்த சம்பவத்திற்கு காரணம் பாஜக உட்கட்சி பூசல். நந்திகிராமில் இரண்டு பாஜக குழுக்கள் உள்ளன. 25ம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. திரிணாமுல் காங்கிரஸால் தோற்கடிக்கப்படுவோம் என்பது பாஜகவுக்குத் தெரியும். அதனால் கலவரத்தை தூண்ட வேண்டும் என முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றி உள்ளனர். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கேவலப்படுத்துவதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இது டிஎம்சி யின் நிர்வாகம்... குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன, மேலும் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று டிஎம்சி கட்சியின் தலைவர் சாந்தனு சென் கூறியுள்ளார்.


மேலும் படிக்க - 'எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம்' - இந்தியா கூட்டணி அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ