பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அவர் ரேடியோவில் பேசியதாவது:-


இன்று சுதந்திர தினம் கொண்டாடும் வங்கதேச மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா எப்போதும் வங்கதேச மக்களுக்கு தோளோடு தோளாக நிற்கும் என்று கூறினார். 


டிஜிட்டல் பரிமாற்றங்களை நோக்கி இந்தியா வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. புதிய இந்திய திட்டத்தால் 125 கோடி மக்களின் திறமை வெளிப்பட்டு வருகிறது. 


நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த பகத்சிங்கிற்கு தலைவணங்குகிறேன். பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் யாருக்கும் அஞ்சாமல் நாட்டுக்காக உயிர்நீர்த்தனர் என்று மோடி புகழாரம் சூட்டினார்.


சத்தியாகிரக போராட்டத்தின் 100-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். இது மகாத்மா காந்தியின் போராட்டத்தில் முக்கிய மானதாகும்.


125 கோடி மக்கள் புது இந்தியாவை உருவாக்கவும், திறமைகளை பலப்படுத்தவும் விரும்புகிறார்கள். உங்கள் கனவை நனவாக்கும் வகையில் புது இந்தியா அமையும். அதை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.


டேராடூனை சேர்ந்த காயத்ரி என்ற 9-வது வகுப்பு மாணவியிடம் இருந்து எனக்கு கடிதம் வந்தது. அவள் ஆறு மாசுபடுத்தப்படுவது குறித்து மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி இருந்தாள். இது நல்லதுதான். ஏனெனில் அவள் தனது கோபத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அது அவளுக்கு பல முயற்சிகளை உருவாக்கும்.


ரூபாய் நோட்டு வாபசை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டிஜிட்டல் இந்தியா திட்டம் ஊழலை ஒழிக்க உதவும். 1½ கோடி மக்கள் பீம் ஆப்-ஐ பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். இதனை நோக்கி மக்கள் வருகின்றனர்.


கருப்பு பணம் மற்றும் ஊழலை மக்கள் நிராகரித்து விட்டனர். கருப்பு பணத்துக்கு எதிராக ஒவ்வொரு மக்களும் வீரர் போல் செயல்பட வேண்டும்.


தூய்மைப்பணி ஒரு வழக்கமாக மாறிவிட்டது. உணவு வீணாக்கப்படுவது தூரதிர்ஷ்டவசமானது. வீணாகும் உணவை பல இளைஞர்கள் தொழில்நுட்பம் மூலம் மற்றவர்களுக்கு வழங்கி உதவி வருகின்றனர். நமக்கு தேவையான உணவை மட்டுமே சாப்பாட்டு தட்டுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


உடல் நலத்துடன் வாழ சிறிதளவு சாப்பிட்டாலே போதும். எனவே உணவை சிறிதளவு எடுத்துக் கொண்டாலே போதுமானது.


மனஅழுத்தத்தில் இருந்து அனைவரும் வெளியே வர முடியும். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ வேண்டும். நமது எண்ணத்தை வெளிப்படுத்தி மன அழுத்தத்தை தோற்கடியுங்கள். எப்போதுமே உங்களது எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.


கூட்டு குடும்பமாக வாழ்வது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். இதில் சிதைவு ஏற்படுவது மன அழுத்தத்திற்கு காரணமாகி விடுகிறது.


பெண்களின் பிரசவ கால விடுமுறையை அரசு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரித்துள்ளது. பச்சிளங்குழந்தைகளை பராமரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அதன் மூலம் குழந்தைகள் தங்களது தாய்மார்களின் முழு பராமரிப்பையும், அன்பையும் பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 18 லட்சம் பெண் ஊழியர்கள் பயனடைவார்கள்.


இவ்வாறு அவர் பேசினார்.