நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் சட்டசபை தேர்தல்களின் முடிவு வரும் டிசம்பர் 11-ஆம் நாள் வெளியாகவுள்ளது. எனினும் அதற்கு முன்னதாக இன்று தெலங்கான, ராஜஸ்தான் மாநில தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பல்வேறு முகவர் இத்தேர்தல்களில் யார் வெற்றி பெறுவர் எனும் தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கருத்து கணிப்புகளின் படி மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலங்கானா மாநிலத்தினை பொறுத்தவரை வழக்கம்போல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியினை பிடிக்கும் என தெரிவிக்கின்றன.


தெலக்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு எதிராக பாஜக, தெலுங்கு தேச கட்சி - காங்கிரஸ் கூட்டணி களம் கண்ட போதிலும் வெற்றி சந்திரசேகர ராவ்விற்கே செல்லும் என கருத்துகணிப்புகள் தெரவிக்கின்றன.


பல்வேறு முகவர்களின் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவுகள் பற்றி என்ன கூறுகிறது...


மத்திய பிரதேசம்
Agencies BJP Congress BSP Others
CNX 126 89 06 09
AXIS 111 113 00 06
JAN KI BAAT 118 105 00 07
CSDS 94 126 00 10

 


ராஜஸ்தான்
Agencies BJP Congress BSP Others
CNX 85 105 02 07
AXIS 63 130 00 06
JAN KI BAAT 93 91 00 15

 


சத்தீஸ்கர்
Agencies BJP Congress BSP Others
CNX 46 35 07 02
AXIS 26 60 00 04
CSDS 52 35 00 03
MY PACE 38 43 00 06

 


தெலங்கானா
Agencies TRS Congress + TDP BJP
CNX 66 37 07
JAN KI BAAT 58 45 06

எத்தனை கருத்துகணிப்புகள் வந்தாலும் முடிவு வரும் டிசம்பர் 11-ஆம் நாள் தெரியவந்துவிடும்... ராஜஸ்தானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை மீட்டெடுக்கும் என அக்கட்சி தலைவர் தெரிவிக்கும் போதிலும், காங்கிரஸ் தலைவர்கள் இம்மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க போவது தாங்கள் தான் என தெரிவித்து வருகின்றனர். 


மத்திய பிரதேச மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர பாஜக-வின் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் கல் ஊன்றியுள்ளார். எனினும் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பாஜக-விற்கு எதிராக எழுந்து வரும் புகார்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் முதல்வர் நாற்காலியினை காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது.


தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலின் முடிவுகள் என்னவாகும் என்பதினை இனி மாற்ற இயலாது. டிச., 11-ஆம் நாள் வரை பொறுத்திருப்போம்.