புதுடெல்லி: டிசம்பர் 2012 முதல் டிசம்பர் 2019 வரை நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. சுமார் ஆறு வருடங்களாக வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இறுதி விசாரணை ஜனவரி 7 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடுமா? என்பது உறுதியாகக் கூற முடியாது. அதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும். நாட்டில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இதுப்போன்ற கொடுமையாக வழக்குகளை நீதிமன்றம் விரைவாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். ஆனால் இங்கு அதற்கு நேர் எதிராக உள்ளது.  குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்படுவதில்லை. நிர்பயா வழக்கு போன்ற ஒரு வழக்கில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், கற்பழிப்பாளர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன்கிழமை நிர்பயா வழக்கை விசாரித்தபோது, ​​தில்லி நீதிமன்றம் பாதிக்கப்பட்டவரின் தாயிடம், "ஒருவர் இறந்துவிட்டார் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர்களுக்கு (குற்றவாளிகளுக்கு) சில சட்ட உரிமைகள் உள்ளன" என்று கூறினார். வழக்கை கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ்குமார் அரோரா ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். குற்றவாளிகளுக்கு புதிய நோட்டீஸ் அனுப்பவும், அவர்களின் சட்டரீதியான தீர்வுகளைப் பயன்படுத்த அவர்களுக்கு நேரம் வழங்கவும் திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதற்கு நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங், "ஆறுதல் இன்னும் இல்லை, ஏனெனில் இந்த விவகாரம் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும் வரை மனம் அடையாது." எனக் கூறினார்.


நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, மறுஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன். நீதி கிடைக்க இன்னும் ஒரு படி உள்ளது. பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற விசாரணையில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். இங்கேயும், அவர்கள் எப்போது தூக்கிலிடப்படுவார்கள் என்ற ஆவலுடன் இருக்கிறேன். அவர் மேலும் கூறுகையில், "நான் 7 ஆண்டுகளாக போராடி வருகிறேன். நான் 1 வருடமாக பாட்டியாலா நீதிமன்றத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன், ஆனால் நீதிமன்றம் இன்னும் உரிமையை வழங்கவில்லை. குற்றவாளிகளின் உரிமையை பற்றி பேசும் நீதிமன்றம், எங்களின் உரிமைகளை பேசவது இல்லை. நீதிமன்றம் சனவரி 7 ஆம் தேதி வழங்கியுள்ளது. அன்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என எந்த உத்தரவாதமும் இல்லை எனக் கூறினார். 


நிர்பயா வழக்கு: 2016 - 2019:
16 டிசம்பர் 2012: டெல்லியில் நிர்பயாவை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது
21 டிசம்பர் 2012: அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளும் 5 நாட்களுக்குள் பிடிபட்டனர்
11 மார்ச் 2013: நிர்பயா வழக்கில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் தற்கொலை செய்து கொண்டார்
13 செப்டம்பர் 2013: கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
05 மே 2017: குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது
6 டிசம்பர் 2019: கற்பழிப்பு குற்றவாளிகளின் கருணை மனுவை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது
18 டிசம்பர் 2019: குற்றவாளி அக்‌ஷய் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
7 ஜனவரி 2020: குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற மனு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரும்.


நிர்பயா பாலியல் வழக்கில் (Nirbhaya Gangrape Case) குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவரான அக்‌ஷய் தாக்கூர் தனக்கு வழங்கப்பட்ட தூக்கி தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) நிராகரித்தது. மறுபரிசீலனை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அக்‌ஷயின் மரண தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் மறுபுறம் நிர்பயாவின் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்ற மனு மீதான விசாரணை டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தால் (Patiala House Court) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் அடுத்த மாதம் விசாரணை ஜனவரி 7 ஆம் தேதி விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளது. 


நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்:
அக்‌ஷய் தாக்கூர்: வயது 33; பஸ் உதவியாளர். இவர் பீகாரில் இருந்து வந்தவர்.
பவன் குப்தா: வயது 23; பழ விற்பனையாளர். டெல்லியில் வசிப்பவர்
வினய் சர்மா வயது 24; உடற்தகுதி பயிற்சியாளர். டெல்லியில் வசிப்பவர்
முகேஷ் குமார்: வயது 30; பஸ் கிளீனர். குற்றவாளி ராம் சிங்கின் தம்பி


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.