Black fungus தொற்று என்பது என்ன? அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? இதோ
கொரோனாவில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று, வெள்ளை பூஞ்சை தொற்று என சுகாதாரம் தொடர்பான அச்சங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
கொரோனாவில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று, வெள்ளை பூஞ்சை தொற்று என சுகாதாரம் தொடர்பான அச்சங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
கவலை வேண்டாம், கவனமாக இருந்தால் போதும் என இந்த பூஞ்சைத் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
இந்த கருப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று சொல்லும் மருத்துவர்கள், அச்சப்பட வேண்டாம் என்று சொல்வதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
Also Read | சற்றே வேகம் தணியும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா
கருப்பு பூஞ்சை தொற்று என்பது, கோவிட்டைப் போல் புதிதாக தோன்றிய நோய் கிடையாது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்னரே பூஞ்சைத் தொற்றுகளின் பாதிப்பு உலகில் இருக்கிறது. அவை முன்பு மிகவும் பெரிய அளவில் தெரியவில்லை.
தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால், இந்த அரிதான ஆனால் கொடிய பூஞ்சை தொற்று பரவலாக ஏற்படுகிறது.
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு பூஞ்சைத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல, புற்றுநோய்க்காக சிகிச்சை மேற்கொள்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், வீரியமான மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பவர்கள் என குறிப்பிட்ட சிலருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட்டது.
Also Read | சற்றே வேகம் தணியும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா
தற்போது கொரோனாவின் பரவலுக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சயினால், பூஞ்சைத் தொற்று அதிக அளவில் பாதிக்கிறது.
காற்று மற்றும் நீரில் இயற்கையாக காணப்படும் பூஞ்சைகள், காற்று மூலம் உடலுக்குள் நுழையும். அதேபோல, தோலில் ஏற்படும் தீக்காயம் அல்லது வெட்டுக் காயத்தின் மூலமாகவும் உடலுக்குள் ஊடுருவலாம்.
இந்தச் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படலாம்.
Also Read | கொல்கத்தாவை கள்ளக்குறிச்சியாக மாற்றினால் கொரோனா ஏமாந்துவிடுமா?
ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்துவோர் அதை நன்றாக பராமரிக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதமூட்டியை நன்றாக பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் அதை மாற்ற வேண்டும். தினசரி அடிப்படையில் முகக் கவசங்களை மாற்றவேண்டும்.
கண்கள் மற்றும் மூக்கை சுற்றி வலி இருந்தாதலோ, சிவந்துப்போனாலோ, காய்ச்சல் வந்தாதலோ உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், சுவாசக் குறைபாடு, தலைவலி, இருமல், மூச்சு விடுவதற்கு சிரமம், பார்வை குறைபாடு என எந்த பிரச்சனை இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR