சத்து மிகுந்த எளிய கீரை வகைகளில் ஒன்று பொன்னாங்கண்ணி. இதற்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் பொன்னாங்கண்ணியின் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். மருத்துவத் தேவைகளுக்காக அதிக அளவில் பொன்னாங்கண்ணி பயிரிடப்படுகிறது.
பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு. சிவப்பு பொன்னாங்காணி என்ற இனமும் உண்டு
Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு நல்லதா?
சித்த மருத்துவத்தில், உடலுக்கு பலம் தரும் காயசித்தியாகவும் பயன்படுகிறது பொன்னாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டால், உடல் பொன்நிறமாக மாறும் என்று சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர்.
பொண்ணாங்கண்ணி பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தாவரம். உணவுக்காகவும் மருத்துவ பயன்பாட்டிற்கும் உகந்தது பொன்னாங்கண்ணி.
பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ, கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவை நீங்கும்.
உடல் சூடு உள்ளவர்கள், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை சூப்பாக வைத்து அருந்தினால் குணம் பெறலாம்.
Also Read | கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு நன்றாக இருக்கும். கல்லீரலை நன்கு பலப்படுத்தி காமாலை போன்ற தொற்றுக்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது பொன்னாங்கண்ணி.
குடலில் ஏற்படும் ரணங்களை விரைந்து ஆற்றும் நோய் எதிர்ப்பு திறனை வலுப்புத்தும் இந்த அருமருந்து, செரிமாண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
செல்களின் வளர்ச்சிதை மாற்றத்தை சரி செய்து வயோதிகத்தினை தள்ளிப்போடும், மூலம், மலச்சிக்கல் போன்ற சிக்கல்களையும் சரி செய்கிறது பொன்னாங்கண்ணி.
Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!
பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிடும் முறை என்ன தெரியுமா? துவையலாகச் செய்து தினமும் உண்டு வரலாம். கீரையாகக் கடைந்து சாப்பிடலாம்.
பொன்னாங்கண்ணி கீரையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு, கண் ரோகம், ஒற்றைத்தலைவலி அனைத்தும் நீங்கும்.
பொன்னாங்கண்ணி கீரையை நெய்விட்டு வதக்கி கண்ணில் ஒத்திவந்தால் கண் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மேலும் பொன்னாங்கண்ணி க்கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடலில் மெருகு கூடும். கண்கள் தெளிவாகும்.
Also Read | கொரோனாவினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி
பொன்னாங்கண்ணியில் உள்ள சத்துக்கள்
பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன.
குளிர்ச்சியை தரவல்ல பொன்னாங்கண்ணிக்கீரையில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள், பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன. சிட்ரோஸ்டிரால், சிட்சுமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவையும் இந்த அற்புதமானக் கீரையில் காணப்படுகின்றன
Also Read | History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 18; முக்கியத்துவம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR