திருப்பதி கோவில் கூட்ட நெரிசல், லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்ஸ்: ஆந்திராவின் திருமலை திருப்பதி வெங்கடேஷ்வரா சுவாமி திருக்கோயிலில், வரும் ஜன. 10ஆம் தேதி (நாளை) வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறும். சொர்க்க வாசல் திறக்கும் போது தரிசனம் செய்தால் புண்ணியம் என்ற நம்பிக்கையால் பக்தர்கள் இந்த நிகழ்வுக்கு அதிகளவில் கூடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக திருமலை திருப்பதியில் மொத்தம் 94 டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டிக்கெட் கவுன்டர்கள் மூலம் பக்தர்களுக்கு இலவச டிக்கெட் விநியோகிக்கப்படுவது வழக்கம். ஜன. 10ஆம் தேதி முதல் ஜன.12ஆம் தேதிவரை நடைபெறும் இந்த இலவச தரிசனத்திற்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்ட 10 நாள் திருவிழாவுக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஜன. 9) காலை 5 மணிக்கு தொடங்க இருந்தது. இந்த டிக்கெட்டுகளை பெற திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்த 90 டிக்கெட் கவுன்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


திருப்பதியில் உள்ள சத்யநாராயணபுரம், பைராகிப்பட்டேடா, ராமாநாயுடு பள்ளிகள் தவிர மூன்று பக்தர்களின் விடுதிகளான விஷ்ணு நிவாசம், சீனிவாசம், பூதேவி ஆகியவற்றின் வளாகங்கள் 94 டிக்கெட் கவுன்டர்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்படியிருக்க விஷ்ணு நிவாசம் பகுதியில் உள்ள ஒரு டிக்கெட் கவுன்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.


மேலும் படிக்க | 2025 மகாகும்பமேளாவில் கலந்து கொள்ளும்... ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி... லாரன் பவல் ஜாப்ஸ்


திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: கட்டுக்கடங்காத கூட்டம்...


பைராகிப்பட்டேடா பகுதியில் விஷ்ணு நிவாசம் கோயில் அருகே உள்ள எம்ஜிஎம் மேல்நிலைப்பள்ளி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவும் திருப்பதி மாநகராட்சி ஆணையர் என். மௌரியா தெரிவித்துள்ளார். நேற்று காலை 4 ஆயிரம் - 5 ஆயிரம் பேர் அந்த கவுன்டரில் கூடியதாகவும், மாலையில் அதை விட கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.


திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: திடீரென கதவுகளை திறந்தது காரணமா?


மாலையில் அதிகம் கூட்டம் கூடியதாலும், இலவச டிக்கெட் வாங்க மக்கள் முண்டியத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், 6 பேர் உயிரிழந்துள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண்மணியும் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் திடீரென கதவுகளை திறந்தது காரணமாக இருக்கலாம் என திருப்பதி தேவஸ்தான தவைலர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் குறித்தும், அங்கு நடந்த சந்தேகத்திற்குரிய நிர்வாக குளறுபடிகள் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான தலைவரிடம் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.


திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: தலைவர்கள் இரங்கல்


நாளை காலை ஆந்திர முதல்வர் திருப்பதிக்கு சென்று நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்றார். இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்திற்கு ஆந்திர அரசுதான் பொறுப்பு என முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த அசம்பாவித சம்பவத்திற்கு பின் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இன்று காலை மீண்டும் தொடங்கப்பட்டது. 


மேலும் படிக்க | சாலை விபத்து... பணம் இல்லாமல் சிகிச்சை பெற மத்திய அரசு கொண்டுவரப்போகும் சூப்பர் திட்டம்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ