Chhattisgarh Crime News: சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை திருமணம் செய்யாமல், வேறொருவரை திருமணம் செய்ததால், முன்னாள் ஆண் நண்பர் திருமணத்துக்கு கிப்ட்டில் பாம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலியானார். என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் ஹோம் தியேட்டர் வெடித்ததில் மணமகனும், அவரது சகோதரரும் உயிரிழந்துள்ளனர். அதோடு ஒரு குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மணப்பெண் திருமணத்துக்கு முன்பு சர்ஜூ மார்க்கம் என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் சர்ஜூ மார்க்கம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். திருமணமான நபருக்கு இரண்டாவது மனைவியாக விருப்பம் இல்லை என அந்தப்பெண் அவரது தொடர்பை துண்டித்து விட்டார்.


அதோடு அந்தப்பெண்ணுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அப்போது ஹேமேந்திராவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் வெகு விமர்சையாக கடந்த மார்ச் 31-ம் தேதி நடந்துள்ளது. திருமண ஏற்பாடுகள் குறித்த செய்தி அறிந்ததும், சர்ஜூ மார்க்கம் தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி திருமணம் நடைபெற்ற அன்று, கூட்டத்தோடு கூட்டமாக சென்று அங்கிருந்த உறவினர் ஒருவரிடம் கிப்ட் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். 


மேலும் படிக்க: அதிர்ச்சி! பள்ளியில் காண்டம், மதுபானம்... மாணவிகளின் வகுப்பு அருகே படுக்கையறை


கடந்த திங்கட்கிழமை திருமணத்துக்கு வந்த பரிசுப்பொருட்களை எல்லாம் ஹேமேந்திரா பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது ஹோம் தியேட்டர் ஒன்று இருந்துள்ளது. ஊர் பேர் போடாத அந்த ஹோம் தியேட்டர் பரிசைக் கண்டு ஹேமேந்திரா மகிழ்ந்துள்ளார். அதோடு தனது அண்ணனின் உதவியுடன் அதை வீட்டில் பிக்ஸ் செய்ய முயன்றுள்ளார். அப்போது பிக்ஸ் செய்து விட்டு ஸ்விட்சை ஆன் செய்ததும் ஹோம் தியேட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் ஹேமேந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அண்ணன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 


அதில் மணப்பெண்ணின் முன்னாள் ஆண் நண்பர் சர்ஜூ மார்க்கம் செய்த சதி அம்பலமானது. அவரை மத்திய பிரதேசத்தில் சத்தீஸ்கர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை இரண்டாம் திருமணம் செய்ய மறுத்ததால், இப்படி வெடிகுண்டு வைத்ததாகக் கூறியுள்ளார். ஹோம் தியேட்டரில் உள்ள ஸ்பீக்கரில் 2 கிலோ வெடிமருந்தை நிரப்பியுள்ளார். சர்ஜூ மார்க்கம் தொழிற்சாலை ஒன்றில் வெடிகுண்டு நிபுணராக இருந்ததாக கூறப்படுகின்றது. அதனால் அவருக்கு சுலபமாக வெடி மருந்து கிடைத்துள்ளது. அதோடு அதனை பயன்படுத்தவும் அவருக்கு தெரிந்துள்ளது. 


இந்தியா முழுவதும் இந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணப் பரிசில் வெடிகுண்டு அனுப்பி புதுமாப்பிள்ளையை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க: தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நபர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ