புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட தேசிய சின்னத்தின் சிறப்பை அறிந்துக்கொள்க!
National Emblem: எடை 9500 கிலோ; 6.5 மீட்டர் உயரம்: புதிய பாராளுமன்றத்தில் கட்டிடத்தின் நிறுவப்பட்ட புதிய அசோக தூண் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.
புது டெல்லி: இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட தேசிய சின்னமான அசோக தூணை திறந்து வைத்தார். இந்த தேசிய சின்னத்தின் மொத்த எடை 9,500 கிலோ மற்றும் அதன் உயரம் 6.5 மீட்டர். சின்னத்தை தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ எடையுள்ள எஃகு துணை அமைப்பு கட்டப்பட்டுள்ளது. அசோக தூணை திறந்து வைத்த பிறகு, அங்கிருந்த புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பணிபுரிந்ததை பெருமையாக கருதுவதாக தொழிலாளர்கள் குழுவினர் பிரதமரிடம் தெரிவித்ததாக PTI செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் மேற்கூரையில், வெண்கல தேசிய சின்னமான அசோக தூண் திறப்பு விழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் உடனிருந்தனர்.
புதிய பார்லிமென்ட் கட்டிடம் கட்டும் பணியில் ஒரு மைல்கல்லை இன்று எட்டப்பட்டுள்ளது. தகவலின்படி, புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை வார்ப்பதற்கான கான்செப்ட் மற்றும் செயல்முறை களிமண் மாடலிங் மற்றும் கணினி கிராபிக்ஸ் முதல் வெண்கல வார்ப்பு மற்றும் மெருகூட்டல் வரை எட்டு வெவ்வேறு கட்டங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
நாடு முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக சின்னத்தின் வடிவமைப்பதில் தங்கள் அயராது உழைப்பை அளித்துள்ளனர்.
மேலும் படிக்க: புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
இந்த அசோக தூணை மேற்கூரைக்கு எடுத்துச் செல்ல, 150-க்கும் மேற்பட்ட பாகங்களாக பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஏப்ரல் இறுதியில் அசோக தூணை இணைக்கும் பணி தொடங்கியது. இறுதியாக இந்த பணிகளை முடிக்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன.
தேசிய சின்னமான அசோக தூணை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு முன்னணி எதிர்க்கட்சிகளை அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் லோக்சபா சபாநாயகருக்கு பதிலாக வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்ததற்காக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக சாடினார்.
மேலும் படிக்க: டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR