அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அடுத்தடுத்து பகிரப்பட்ட ஆபாசப் படங்கள்..!
கேரளாவில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிடப்பட்ட ஆபாசப் படங்களால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சி!!
கேரளாவில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிடப்பட்ட ஆபாசப் படங்களால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சி!!
கேரளாவில் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கென கட்செவி அஞ்சலில் குழு ஒன்றை தொடங்கி உள்ளனர். அந்த குழுவில் தங்கள் பணி குறித்த தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். மேலும், அரசு ஊழியர்களின் சங்க செயல்பாடுகள், அது தொடர்பான கூட்டங்கள், அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் போன்றவற்றையும் கட்செவி அஞ்சலில் பகிர்ந்து வந்துள்ளனர்.
இந்த குழுவில் அட்மின்னாக சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் இருந்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு சங்க செயல்பாடுகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சங்கத்தின் கட்செவி அஞ்சலில் குழுவில் ஏராளமான ஆபாசப் படங்கள் அடுத்தடுத்து பகிரப்பட்டுள்ளது. இதைக்கண்ட பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகளிடம் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சங்க நிர்வாகியும், குரூப் அட்மினும் இதுபற்றி விசாரித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த படங்களை குரூப்பில் இருந்து நீக்குவதாகவும் உறுதி அளித்தார்.
இந்நிலையில், சங்க உறுப்பினர் ஒருவரின் செல்போன், தொலைந்து விட்டதாகவும், அந்த செல்போனை எடுத்தவர் அதில் ஆபாசப் படங்களை பதிவேற்றியதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர் ஆபாசப் படங்களை பதிவேற்றியவரை பாதுகாக்க தவறான தகவலை பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் கட்செவி அஞ்சலில் குழுவின் அட்மின் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினர்.