எந்த வெப்சைட்டில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்: விவரம்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள இணையதளத்தை அறிவித்த தேர்தல் ஆணையம்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் கலவையாகவே வந்துள்ளது. நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள், அடுத்த வருடம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
நாளை வெளியாகும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை காலை 8 மணி முதல் http://eciresults.nic.in மற்றும் http://eciresults.gov.in என்ற இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்படும் என தேர்தல் ஆணைய தெரிவித்துள்ளது.