BJP Rajasthan New CM Announcement: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் (Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan ) மூன்று மாநிலங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மூன்று மாநிலங்களுக்கு முதல்வர் யார் என்பதை அறிவிக்க பாஜக தலைமை தொடர்ந்து தாமதம் செய்து வந்தது. எந்தொரு முடிவையும் உடனக்குடன் எடுக்கும் பாஜக தலைமைக்கு என்ன ஆனது? ஏன் இந்த தாமதம் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான புதிய முதல்வர்கள் குறித்து அறிவிப்பை பாஜக வெளியிட்டது. மத்தியப் பிரதேசத்தில் பெரிய முகங்களைத் தவிர்த்து, மோகன் யாதவிடம் முதல்வர் நாற்காலி ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில் சத்தீஸ்கரின் ஆட்சி விஷ்ணுதேவ் சாயிடம் ஒப்படைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வரை தேர்வு செய்வது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக்கூட்டம் மாலை 6.30 மணி வரை நடைபெறும். இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும் என்றும், இத்துடன் 9 நாட்களாக நடைபெற்று வந்த இழுபறி முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 


ராஜஸ்தான் போரில் யார் 'மகாராஜா' ஆக்கப்படுவார், யார் தலையில் அதிகார கிரீடம் வைக்கப்படும்? மீண்டும் முதல்வர் நாற்காலியை வசுந்தராவிடம் ஒப்படைக்குமா பாஜக? அல்லது ராஜஸ்தானில் இந்துத்துவாவின் முகமாக மாறியுள்ள பாபா பாலக்நாத்திடம் ஆட்சியை ஒப்படைக்ககப்படுமா? என்ற கேள்விகளுக்கு இன்று விடை கிடைக்கவுள்ளது.


இப்படிப்பட்ட நிலையில் ராஜஸ்தானில் என்ன நடக்கும் என்பதுதான் கேள்வி. மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர் மாதிரி ராஜஸ்தான் மாநிலத்திற்கும் புதிய முதல்வர் முகம் இருக்குமா அல்லது வசுந்தரா ராஜேவை மீண்டும் ஒருமுறை முதல்வராகும் பாஜக முயற்சிக்குமா என்ற விவாதம் முழு வீச்சில் உள்ளது. மேலும் இது சஸ்பென்ஸாகவும் உள்ளது.


ராஜஸ்தானில் இன்று சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு முன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மேலிட பார்வையாளர்களின் புகைப்பட அமர்வும் நடந்தது. ராஜ்நாத் சிங், வினோத் தாவ்டே, சரோஜ் பாண்டே ஆகியோரை ராஜஸ்தானின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அரசு நியமித்துள்ளது. மூன்று தலைவர்களும் ஜெய்ப்பூரை அடைந்துள்ளனர். வசுந்தரா ராஜேவை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். மறுபுறம், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் ராஜ்நாத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.


ராஜஸ்தானில் புதிய பாஜக எம்எல்ஏக்களிடம் முதல்வர் குறித்து ஆலோசனை பெறுவார். இதையடுத்து பாஜக மேலிடத்தின் ஒப்புதலுக்குப் பிறகு முதல்வர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இன்று அறிவிக்கப்படும்.


ராஜஸ்தானில், முதல்வர் பதவிக்கான வேட்பாளரை குறிப்பிடாமல் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட்டது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அமோக பெரும்பான்மையை பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் 69 இடங்களில் வெற்றி பெற்றது. 


ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து பாஜகவில் முதல்வர் பதவி குறித்து சலசலப்பு ஏற்பட்டது. பாஜகவில் முதல்வர் பதவிக்கு பல போட்டியாளர்கள் உள்ளனர். இம்முறை பல எம்.பி.க்களை சட்டசபை தேர்தலில் போட்டியிட வைத்தது பாஜக. இருப்பினும், பாஜகவுக்கு முக்கிய சவாலாக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா இருந்து வருகிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லியில் மத்திய தலைமையையும் அவர் சந்தித்துள்ளார், மேலும் அவரது வீட்டிற்கு எம்எல்ஏக்கள் தொடர்ந்து சென்று வருகின்றனர்.


இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே, இந்த முறையும் முதல்வர் பதவிக்கு கடுமையாக முயற்சித்து வருகிறார். ஜெய்ப்பூர் முதல் டெல்லி வரை அனைவரிடமும் பேசியுள்ளார். ஜெய்ப்பூரில் 60க்கும் மேற்பட்ட புதிய பாஜக எம்எல்ஏக்களை அவர் சந்தித்துள்ளார். அதே நேரத்தில் டெல்லியில் தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் சந்தித்து பேசினார். ஆனால், முதல்வர் யார் என்பதை நாடாளுமன்றக் கட்சிதான் எடுக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ