புது டெல்லி: இன்று (அக்டோபர் 18, புதன்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி, இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியை கடுமையாக தாக்கி பேசினார்.  சுமார் 14 நிமிட செய்தியாளர் சந்திப்பில், அதானி ஊழல், அதனியால் மின்சார கட்டணம் அதிகரித்து விட்டது,  மக்களின் பைகளில் இருந்து நேரடியாக பணம் திருடப்படுகிறது என பல குற்றசாட்டுக்களை முன்வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதானி மீதான குற்றச்சாட்டுகள் பட்டியலிட்ட ராகுல் காந்தி, மோடி தலைமையிலான பாஜக அரசையும் தாக்கி பேசினார். அதானியிடம் பாஜக அரசு விசாரிக்காதது ஏன்? அவர்கள் எதை விரும்புகிறாரோ, அதைப் பெறுகிறார்கள். பிரதமர் மோடியின் பாதுகாப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை? இவர்களுக்குப் பின்னால் யார் சக்தி இருக்கிறது? என கேள்விகளை எழுப்பினார்.


காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ​​பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி, கவுதம் அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறார் என்றும், அது இந்தியாவுக்கு வரும்போது அதன் விலை இரட்டிப்பாகிறது என்றும் குற்றம் சாட்டினார். மின்சார விலை அதிகரித்து வருகிறது, அதிக விலைப்பட்டியல் நடக்கிறது, அதானி ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறார்.


மேலும் படிக்க - பிரதமர் மோடி ஜோக் அடிப்பது சரியானதல்ல... ராகுல் காந்தி காட்டம்


ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளின் பட்டியல்..


இந்தோனேசியா நிலக்கரி, இந்தியாவுக்கு வரும்போது விலை இருமடங்காகிறது


பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி, கவுதம் அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறார் என்றும், அது இந்தியாவுக்கு வரும்போது அதன் விலை இரட்டிப்பாகிறது என்று குற்றம் சாட்டினார்.


ஏழைகளின் பணம் அதானியின் பாக்கெட்டுக்குள் செல்கிறது


நிலக்கரி விலை உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவில் மின்சாரம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதால் உங்கள் பாக்கெட்டில் இருந்து நேரடியாக அதானியின் பாக்கெட்டுக்கு பணம் செல்கிறது. இதன் மூலம் இந்திய குடிமக்களின் பாக்கெட்டில் இருந்து நேரடியாக சுமார் ரூ.12 ஆயிரம் கோடியை அதானி ஜி எடுத்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மின்சார மானியம் வழங்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் கொடுக்கப் போகிறோம் என்றார்.


செபியிடம் ஆவணம் இல்லையா? விசித்திரமாக இருக்கிறது -ராகுல்


விசாரணை நிறுவனமான செபி மீதும் கேள்வி எழுப்பிய ராகுல், "எங்களுக்கு ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று செபி கூறியது. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், பைனான்சியல் டைம்ஸிடம் ஆதாரம் உள்ளது. ஆனால் ஒரு விசாரணை அமைப்பிடம் அதானிக்கு எதிரான ஆதாரம் அல்ல. நாட்டில் உயர் பதவிகளை வகிக்கும் நபர்களிடமிருந்து அவர் (கவுதம் அதானி) பாதுகாப்பைப் பெற்றுள்ளார் என்பது இது தெளிவாகத் தெரிகிறது.


மேலும் படிக்க - தெலுங்கானாவில் பாஜக-பிஆர்எஸ் இணையுமா? மாறும் காட்சிகள்! கேடிஆர் ஆவேசம்


அதானி மீது நடவடிக்கை.. பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்?


இந்திய பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் இது நடக்காது. இந்த ஜென்டில்மேன் (அதானி) மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது குறித்து பிரதமர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? மேலும், அதானி ஊழல் செய்வதையும், பிரதமர் மோடி அவருக்கு உதவுவதையும் இந்திய மக்கள் அறிவார்கள் என்றார். பிரதமர் தனது நம்பகத்தன்மையை பாதுகாக்க விரும்பவில்லை எனக் கூறினார்.


பிரதமரிடம் இந்திய ஊடகங்கள் ஒரு கேள்வி கூட கேட்பதில்லை


இந்திய ஊடகங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி ராகுல் காந்தி, "சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அதானிக்கு எதிரான குற்றசாற்று வெளி வருகிறது. ஆனால் அவரிகளிடம் இந்திய ஊடகங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இது மின்சாரம் சம்பந்தமானது, ஏழைகளின் விஷயம், திருட்டு விஷயம் ஆனால் இந்திய ஊடகங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறினார்.


சரத் பவாரிடம் கேள்வி கேட்டீர்களா? ராகுல் காந்தி பதில்


இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் அங்கம் வகிக்கும் இருந்த சரத் பவார், செப்டம்பர் 23 அன்று கவுதம் அதானியை சந்தித்தை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினீர்களா என ராகுலிடம் கேட்டபோது, ​​"இல்லை, சரத் பவாரை நான் கேள்வி கேட்க முடியாது. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. நரேந்திர மோடி அதானியை காப்பாற்றுகிறார், அதனால் தான் மோடியிடம் நான் கேள்வி கேட்கிறேன்" என்றார்



சரத் பவார் அதானி இடையிலான உறவு


முன்னதாக ஜூன் மாதத்தில் சரத்பவாரின் வீட்டிற்கு அதானி சென்றிருந்தார். பவாருக்கும் அதானிக்கும் இடையிலான உறவு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் பழமையானது. 2015 இல் வெளியிடப்பட்ட அவரது மராத்தி சுயசரிதையான லோக் புல்புலையா சங்கதியில், நிலக்கரி வணிகத்தில் நுழைந்த அதானியைப் பாராட்டியிருந்தார்.


மேலும் படிக்க - ராகுல் காந்தி 'தீயவர், மதத்திற்கும் ராமருக்கு எதிரானவர், புதிய சகாப்தத்தின் ராவணன்' -பாஜக


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ