ராய்பூர்: சட்டீஸ்கர் மாநில முதல்வர் யார் என்பதை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை இன்று மாலை ராய்பூரில் நடைபெறவுள்ள MLA-க்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என தெரிகிறது. 


நடந்து முடிந்த சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் இம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. 


மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பூபேஷ் பாகெலே, TS சிங் டியோ, தம்ரவாஜ் சாஹு, சந்திரன் தாஸ் மஹன்த் ஆகியோருக்கு இடையே முதல்வர் போட்டி நிலவி வருகின்றது. இருப்பினும் பூபேஷ் உள்ளிட்ட சட்டீஸ்கர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் தொடர்ந்து ஆலோசனை மோற்கொண்டு வருகின்றார்.


முன்னதாக நேற்று நான்கு தலைவர்களுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி இன்று மாலை நடைப்பெறும் ராய்பூர் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் யார் என்பதை அறிவிப்பார் என தெரிகிறது.


டெல்லியில் ராகுல் காந்தியுடனான ஆலோசனைக்கு பின்னர் ராய்பூர் திரும்பிய பூபேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்... மல்லிகார்ஜூன கார்கேவும், புனியாவும் இன்று பிற்பகலில் ராய்பூர் வரவுள்ளனர். காங்கிரஸ் MLA-க்கள் உடனான கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் யார் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.