ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் முதல்வர்களை தேர்ந்தெடுக்க மேலிட பார்வையாளர்கள் நியமித்த பாஜக
Who Will B The Next CM For 3 State: ராஜஸ்தான் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு முதல்வர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், ,பாஜக தலைமை மேலிட பார்வையாளர்கள் நியமித்து உள்ளது.
Election News In Tamil: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மேலிட பார்வையாளர்களை நியமித்தது, அவர்களின் விவரங்களை பாஜக அறிவித்துள்ளது. இந்த மேலிட பார்வையாளர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தி, மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்பதை குறித்து அறிவிப்பார்கள். எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பதைக் குறித்து பார்ப்போம்.
ராஜஸ்தான் மேலிட பார்வையாளர்கள்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அவருக்கு உதவியாக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் ராஜ்யசபா எம்.பி சரோஜ் பாண்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய பிரதேசம் மேலிட பார்வையாளர்கள்
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், டாக்டர் கே.லக்ஷ்மன், ஆஷா லக்ரா ஆகியோர் மத்தியப் பிரதேசத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சத்தீஸ்கர் மேலிட பார்வையாளர்கள்
பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய அமைச்சர்களான சர்பானந்தா சோனோவால், துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலிட பார்வையாளர்களின் பணி என்ன?
மூன்று மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட மேலிட பார்வையாளர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த அந்தந்த மாநிலங்களுக்குச் செல்வார்கள். அங்கு தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவாரத்தை நடத்தி இறுதியாக வருங்கால முதல்வர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
முதல்வர் பெயர்களை அறிவிப்பதில் என்ன சிக்கல்?
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) சார்பில் அந்தந்த மாநிலங்களுக்கான முதல்வர் பெயர்களை அறிவிப்பதில் என்ன சிக்கல்? ஏன் இந்த இழுபறி என கேள்விகள் எழுப்பட்டு வந்த நிலையில், பாஜக தலைமை மூன்று மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்க்களுக்கு மேலிட பார்வையாளர்களை நியமித்துள்ளது.
மூன்று மாநில முதல்வர்களின் பெயரை அறிவிப்பதில் ஏன் தாமதம்
கடந்த 10 வருடம் அரசியல் உற்று நோக்கினால், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை பொதுவாக விரைவான மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பதில் பெயர் பெற்றது. ஆனால் இந்த மூன்று மாநிலங்களில் முதல்வரின் பெயரை முடிவு செய்ய கட்சி அதிக நாட்கள் எடுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உள்கட்சி பூசல் மற்றும் வாக்கு வங்கி மீது இருக்கும் கவனம். இதுபற்றி கட்சியினர் எதுவும் வெளிப்படையாக கூறாமல் தவிர்த்தாலும், கடந்த சில நாட்களாக வெளிவரும் தகவல்கள் மூலம் தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ