பெங்களூரு: பரப்பான கட்டத்தை நோக்கி கர்நாடக அரசியல் செல்கிறது. யார் ஆட்சி அமைக்க போகிறார்கள். காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் அல்லது பாஜக அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மஜத - காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2018 மே 12 ஆம் தேதி தேர்தல் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜ 104, காங்கிரஸ் 79, மஜத 37,  பகுஜன் சமாஜ் 1 மற்றும் சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், யார் ஆட்சி அமைப்பார்கள் என குழப்பம் நீடித்தது.


அந்த நேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று எடியூரப்பா தலைமையிலான பாஜக கோரிக்கை வைத்தது. ஆனால் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைத்து கர்நாடகவில் ஆட்சி அமைத்தது. அவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவு அளித்தனர். 


தற்போதைய நிலவரப்படி, கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இடையில் சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதில் பாஜக வெற்றி பெற்றது. அந்த வகையில், பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 116 எம்.எல்.ஏ.க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும், 2 சுயேச்சைகள் உள்ளனர் 


இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ. என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


விரிவாக பார்போம்....!!


ராஜினாமா செய்வதற்கு முன்பு.....


காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் - 116
பிஎஸ்பி - 1
சுயேச்சைகள் - 2
பாஜக - 105
தொகுதிகள் மொத்தம் - 224
பெரும்பான்மைக்கு தேவை - 113


ராஜினாமா செய்த பிறகு.....


ராஜினாமா கடிதம் அளித்தவர்கள் - 14 எம்.எல்.ஏ.க்கள்
காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் - 103
பிஎஸ்பி - 1
சுயேச்சைகள் - 2
பாஜக - 105
மொத்தம்(224-14) - 211
பெரும்பான்மைக்கு தேவை - 106


இந்த புள்ளி விவரத்தை வைத்து பார்த்தால், ஆட்சி அமைக்க பாஜகவுக்கு தேவை ஒரு இடம். அதேபோல காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு தேவை 3 இடங்கள். பிஎஸ்பி காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அப்படி பார்த்தால், காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு தேவை 2 இடங்கள். சுயேச்சைகள் 2 பேர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ, அவர்கள் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.