டெல்லி: பல மாதங்களாக பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பலமுறை நிதி உதவி அளித்து வந்தது மத்திய அரசு. ஆனாலும் நிதிப்பற்றாக்குறை தீர்ந்தபாடு இல்லை. எனவே இந்த நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சியும் கைகொடுக்க வில்லை. அதனால் ஏர் இந்தியா நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர் இந்தியா நிறுவனம் நிதிபற்றாக் குறையால் தவிப்பதற்கு காரணங்களில் ஒன்று பல அரசு அமைப்புகளில் உள்ள அரசு அதிகாரிகள் பயணம் செய்யும், அதற்கான கட்டணத்தை செலுத்தவது இல்லை. அந்த கட்டண பாக்கியை குறித்து எந்தவித கவனம் செலுத்துவது இல்லை. இதுவே தனியார் விமானம் என்றால் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.


இந்நிலையில், ஒவ்வொரு அரசு அமைப்பும் எவ்வளவு பாக்கி வைத்துள்ளது என்பது குறித்து ஏர் இந்தியா நிறவனம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வுக்கு பிறகு அரசு அமைப்புகள் மொத்தம் ரூ.268 கோடி வரை பாக்கி வைத்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அதனால் ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்திருக்கும் அரசு அமைப்புகளுக்கு இனி டிக்கெட் வழங்கப்படாது. கட்டண பாக்கியை திருப்பி செலுத்தினால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. 


ஏர் இந்தியா பல தசாப்த கால வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. சிபிஐ, ஐபி, இடி, சுங்கத்துறை, இந்திய ஆடிட் போர்டு, மத்திய தொழிலாளர் நிறுவனம், இந்திய தணிக்கை வாரியம், பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை போன்ற அமைப்புக்களை சேர்ந்தவர்களின் பெயர்களை உள்ளடக்கிய அவர்களின் நிலுவைத் தொகை பட்டியலை நிறுவனம் தயாரித்துள்ளது. 


கடந்த மாதம், ஏர் இந்தியாவின் நிதித்துறை ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் / நிலையங்களிலிருந்தும் அரசாங்க நிலுவைத் தொகையை குறித்து கணக்கு எடுக்கத் தொடங்கியது. இதுக்குறித்து ஒரு விமான அதிகாரி கூறுகையில், கடந்த சில வாரங்களில் "லட்சத்துக்கும் மேற்பட்ட கடனாளிகள்" பணத்தை திருப்பி அளித்துள்ளனர். பணம் செலுத்திய பின்னரே அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. இதில் மக்களவை உறுப்பினர், விமான போக்குவரத்து அமைப்பு மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதை உறுதிப்படுத்திய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர், “கடந்த சில வாரங்களில் சுமார் ரூ .50 லட்சத்தை மீட்டுள்ளோம். அரசு அமைப்புகளிடம் இருந்து நிலுவைத் தொகையைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் கட்டணத்தைப் பெறுவதற்கு கடுமையான அணுகுமுறையைப் பயன்படுத்த முடியாது எனக் கூறினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.