Demands For Arresting Nupur Sharma: முகமது நபிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரால் தான் நாடு முழுவதும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு வழிவகுத்தது என்றும், இது மக்களின் உணர்வுகளைத் தூண்டியது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதற்கு நுபூர் சர்மா தான் காரணம். தனது செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும். நுபுர் சர்மாவிற்கு எதிராக பல எஃப்ஐஆர்கள் இருந்தபோதிலும் அவரை ஏன் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்படவில்லை? என நுபுர் ஷர்மா குறித்து சரமாரியாக உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை குறிவைத்து வருகின்றன. அந்த வரிசையில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, நூபுர் ஷர்மாவை பாஜக காப்பாற்றி வருகிறது என விமர்சித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓவைசி தனது செய்தியாளர் சந்திப்பில், "நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்களுக்காக நூபுர் ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிவைத்துள்ளார். நூபுர் ஷர்மாவை பாஜக காப்பாற்றி வருகிறது என்று கூறிய அவர், இதுபோன்ற சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.


பிரதமர் மோடி முழு நாட்டிற்கும் பிரதமர். இதுபோன்ற சூழ்நிலையில், முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


மேலும் படிக்க: நுபூர் சர்மாவை சரமாரியாக விளாசிய உச்சநீதிமன்றம்


நூபுர் ஷர்மா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஏன் காப்பாற்றப்படுகிறார்? பாஜகவும் மோடியும் ஏன் இந்தப் பிரச்சினையை கௌரவப் பிரச்சினையாக ஆக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் எவ்வளவு காலம் மௌனம் காப்பார்? சட்டம் தன் கடமையை செய்யட்டும். இன்றைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதைக் கவனிக்க வேண்டும்.


ஒவைசி மேலும் கூறுகையில், "நூபுர் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்தது எல்லாம் நாடகம். அது தண்டனை அல்ல. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், தென்னிந்தியாவில் பாஜக விரைவில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது. அதன் விருந்தினர் பட்டியலில் நூபுர் ஷர்மாவின் பெயரும் உள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் காவல்துறையை தமது பணியை செய்ய விடாமல் தடுப்பது தெளிவாகின்றது. அதனால்தான் இந்த வழக்கில் இன்னும் நீதி கிடைக்கவில்லை.


ஒரு பக்கம் "நீங்கள் நுபுர் ஷர்மாவைக் காப்பாற்றுகிறீர்கள், மறுபுறம் முகமது ஜுபைராய் கைது செய்கிறீர்கள். ஒருபக்கம் பெண்ணைக் காப்பாற்றுகிறார்கள். மறுபுறம் ஒரு பெண்ணின் பெயரில் இருக்கும் வீட்டை இடிக்கிறார்கள்" என்றார்.


மேலும் படிக்க: ’ஹனிமூன் to ஹனுமன் ஹோட்டல்’ டிவிட்டர் பதிவுக்காக முகமது ஜூபைர் கைது - பின்னணி!


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்ஹையாலால் கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் நூபுர் சர்மாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு நூபுர் ஷர்மாவின் விவகாரம் நாடு முழுவதும் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஒவைசி உட்பட பல தலைவர்கள் நுபூரை கைது செய்யக் கோரி வைத்து வருகின்றனர்.


செய்தி சேனலில் ஒரு விவாதத்தின் போது நபிக்கு எதிராக நுபூர் ஷர்மாவின் கருத்தால், நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது மற்றும் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்தது. பல வளைகுடா நாடுகளில் இருந்து குறிப்பாக முஸ்லீம் நாடுகள் தங்கள் கண்டனத்தை மற்றும் எதிர்ப்பை தெரிவித்தன. அதன் பின்னர் நுபூர் ஷர்மாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக.


மேலும் படிக்க: இஸ்லாமியர்கள் போராட்டம்... வீடுகளை இடித்த யோகி ஆதித்யநாத் அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe